Vijay Sethupathi: அழகை மட்டும் வைத்து நிலைத்து நிற்க முடியாது: கத்ரீனாவை வெட்கப்பட வைத்த விஜய் சேதுபதி
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கத்ரீனா கைஃபை புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி
தான் பார்த்த நடிகர்களில் மிக அழகான அதே நேரத்தில் மிக புத்திசாலியான நடிகை கத்ரீனா கைஃப் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவண் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப் மற்று விஜய் சேதுபதி படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்கள்.
கத்ரீனாவை வெட்கப்பட வைத்த விஜய் சேதுப்தி
The way VJS said, "She is so beautiful", " Sriram Sir maine galat kuch galat nai bola"😭😂❤😘
— Vaishali #VicKat Forever🥰❤ (@rosesbudes) January 6, 2024
And Katrina was laughing and then he just moved his head and the way he smiled while looking at her😭💕❤#KatrinaKaif #VijaySethupathi #MerryChristmas 🍷pic.twitter.com/AEskNxzJz7
இந்த நிகழ்வில் விஜய் சேதுபதியிடம் கத்ரீனா கைஃப் உடன் நடித்த அனுபவத்தைப் பற்றி கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி. “நான் கத்ரீனா கைஃபின் மிகப்பெரிய ரசிகன். முதல் நாள் அவரை செட்டில் பார்த்தபோது அது அப்படி ஒரு அனுபவமாக இருந்தது. என்னுடன் நடிக்கும் நடிகர்களின் எண்ணங்களை புரிந்துகொள்ள நான் முயற்சிப்பேன். அப்போது தான் அவர்களுடன் சேர்ந்து என்னால் நடிக்க முடியும் . கத்ரீனா கைஃப் மிகவும் அழகானவர். அழகு மட்டும் இல்லை அவர் மிகவும் புத்திசாலியானவரும் கூட. வெறும் அழகை வைத்து சினிமாவில் இத்தனை ஆண்டுகள் ஒருவரால் தாக்கு பிடிக்க முடியாது.
கத்ரீனா கைஃப் சிந்தித்து நடிக்கக் கூடியவர். அவரிடம் நீங்கள் ஒன்று சொன்னால் அதை முடிந்த அளவிற்கு புரிந்துகொள்ள அவர் முயற்சி செய்வார். அதே நேரத்தில் நீங்கள் சொல்வதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அதை பொறுமையாக கேட்கக் கூடியவர். ஒவ்வொரு காட்சியிலும் தனது முழு உழைப்பையும் கொடுத்து அந்த காட்சியை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று யோசிக்கக் கூடியவர். எல்லாவற்றுக்கும் மேல் அவர் மிக அழகானவர்.” என்று விஜய் சேதுபதி பேச அவர் அருகில் அமர்ந்திருந்த கத்ரீனா கைஃப் வெட்கத்தை மறைக்க போராடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.