Watch Video: கட் - அவுட்டுக்கு பால் அபிஷேகம்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி மனைவி.. அடுத்து நடந்தது இதுதான்..
தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதியில் கட் அவுட்டை நெகிழ்ச்சியாக பார்த்து ரசித்த விஜய் சேதுபதியின் மனைவி.
![Watch Video: கட் - அவுட்டுக்கு பால் அபிஷேகம்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி மனைவி.. அடுத்து நடந்தது இதுதான்.. Vijay Sethupathi's wife who enjoyed watching the FDFS of Kaathu Vaakula Rendu Kadhal Watch Video: கட் - அவுட்டுக்கு பால் அபிஷேகம்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி மனைவி.. அடுத்து நடந்தது இதுதான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/28/4aca4bae24e86fe3cfd5e77d43627bed_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகன் பாத்திரம் மட்டுமின்றி பல வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
View this post on Instagram
இந்நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை முதலே விஜய் சேதுபதி ரசிகர்களும், நயன் தாரா, சமந்தா ரசிகர்களும் திரைப்படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் காட்சியை நேரில் பார்த்து அவரது மனைவி நெகிழ்ச்சியடையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதியில் கட் அவுட்டை நெகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதியின் மனைவி. அப்போது ரசிகர்கள் பேனருக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். அதனைக் கண்டதும் இன்னமும் உற்சாகமாக பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்ல் இந்த வீடியோவை பதிவிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
Vjs wife 🥺😍❤️#KaathuVaakulaRenduKadhal pic.twitter.com/ueaxi46Hpk
— முரட்டு அடி மகேஷ் (@MuratuAdiMahesh) April 28, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)