Vijay Sethupathi| ”குமுதா, குவாண்டிட்டி வேண்டாம் குவாலிட்டிதான் வேண்டும் “ - விஜய் சேதுபதியை கலாய்த்து மீம்ஸ் போடும் ரசிகர்கள்..
”விஜய் சேதுபதி நீங்கள் வகுத்துள்ள சினிமா தந்திரத்தை மறுபடியும் யோசிக்க வேண்டிய நேரம் இது” என மீம்ஸ் போடுகிறார்கள்
விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் 'அனபெல் சேதுபதி'. இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படம் நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று அறிமுகமானது. வழக்கமாக தாத்தா , பாட்டி குழந்தைகளுக்கு சொல்லும் பேய் கதைகளை கையில் எடுத்த இயக்குநர் அதனை ஃபேண்டசி , காமெடியாக மாற்றி புதிய முயற்சியை கையாண்டுள்ளார். 'அனபெல் சேதுபதி' படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.சமீக காலமாக தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி வாயிலாக தொகுப்பாளராகவும் களமிறங்கினார். அந்த நிகழ்சியும் தற்போது சுவாரஸ்யம் இழந்துவிட்டதாக தெரிகிறது.
இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே அடுத்தடுத்த படங்கள் , விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ளன. திரையரங்கில் வெளியான லாபம் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. நேரடியாக தொலைக்காட்சி மற்றும் ஒடிடியில் வெளியான துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் புதுமையான கதைக்களமோ அல்லது சுவாரஸ்யமோ இல்லை என்பதால் அதுவும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது வெளியான அனபெல் சேதுபதி படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் , விஜய் சேதுபதியை சரமாரியாக ட்ரால் செய்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டரில் ரசிகர்கள் பதிவிட்டுள்ள சில மீம்ஸ் அண்ட் ட்ரோல்ஸை கீழே காணலாம்.
BlastingTamilCinema பக்கத்தில் ரசிகர் ஒருவர் ”விஜய் சேதுபதி நீங்கள் வகுத்துள்ள சினிமா தந்திரத்தை மறுபடியும் யோசிக்க வேண்டிய நேரம் இது. வரிசையாக படங்களில் எல்லாம் நடிப்பது எல்லாம் உங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் நடிகனாக்காது. தரமான படங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, எண்ணிக்கையில் கவனம் செலுத்துகிறார் போலும் ஒரே மாதிரியான உடல் மொழி, ஒரே மாதிரியான நடிப்பை மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்
#VijaySethupathi needs to rethink of his strategy.. Just acting in any movie that comes to your way, wont make you a memorable actor.. He is choosing quantity over quality.. Not sure when he delivered a blockbuster with him being a main hero..
— BlastingTamilCinema (@BLSTG) September 18, 2021
மற்றொரு ரசிகர் “இப்படியான கதைகளை தேர்வு செய்து நடித்தால் எதிர்காலத்தில் இவரின் படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டுமென்றே தோன்றாது” என பதிவிட்டுளார்.
If #VijaySethupathi continue this trend of selecting scripts, people will surely lose interest of going theatre for his solo movies in future ⚠️ pic.twitter.com/cc6kDrggyd
— Balaji Duraisamy (@balajidtweets) September 17, 2021
”விஜய் சேதுபதியிடம் அந்த ஃபயர் இல்லை”
#TughlaqDurbar I enjoyed it but no fire in #VijaySethupathi performance 😞 pic.twitter.com/7b4YacOV6V
— V2👾 (@VLogendran) September 18, 2021
குமுதா, க்வாண்டிட்டி வேணாம், க்வாலிட்டிதான் வேணும் என்கின்றனர் விஜய் சேதுபதியைன் ரசிகர்கள்.