Vijay sethupathi | ‛கைதி படத்தை தவிர்த்தேன்... கார்த்தி போன் செய்து NOC கேட்டார்...’ - மிஸ்ஸிங் ஸ்டோரி சொன்ன விஜய் சேதுபதி!
நாய் பேய்லாம் வாழ முடியுது நம்மலால வாழ முடியாதா என்னும் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது” என அவர் பாணியில் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கொடுத்த கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் சரி அது சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் , பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்தக்கூடியவர். இவர் நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ விக்ரம்’ இந்த படத்தில் ஹீரோவாக கமல்ஹாசன் நடிக்க , பஹத் பாசிலுடன் வில்லனாக கைக்கோர்க்கிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.
View this post on Instagram
லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை தனது படத்தில் நடிக்க முன்னதாகவே ஆர்வம் காட்டியிருக்கிறார். கைதி திரைப்படம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆனால் அந்த படத்தில் விஜய் சேதுபதி சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாம் . மேலும் கார்த்தி நடிக்க தொடங்குவதற்கு முன்னால் விஜய் சேதுபதியிடம் ஃபோன் செய்து கேட்டுவிட்டு , ”யோவ் விஜேஎஸ் ...நான் நடிக்கிறேன்.நீங்கள் கமிட்டாகவில்லை என கூறினார்கள்..என்ன ஓக்கேதானே “ என்றாராம். உடனே விஜய் சேதுபதி “ நீங்க செமயா நடிப்பீங்க சார்..தாராளமா பண்ணுங்க என்றாராம் “. இதே போல விஜய் சேதுபதியின் நண்பர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் திரைப்படத்திலும் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கதான் அனுகினார்களாம் படக்குழு. ஆனால் அதிலும் சில காரணங்களாக் விஜ சேதுபதியால் நடிக்க முடியவில்லையாம் . அந்த படத்தில் நடிக்க முடியாதது எனக்கு வருத்தம்தான் என்கிறார் விஜய் சேதுபதி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் அனுகிய விதம் எனக்கு பிடித்திருந்தது என்கிறார்.
View this post on Instagram
விஜய் சேதுபதி சமீப காலமாகவே சர்ச்சைக்குள் சிக்கி வருகிறார். இது குறித்து பதிலளித்த அவர் , “ அது போல பண்ணுங்க...நல்லா வைரலாகுது...நம்மல விட மிக கேவலமான செய்திகளில் அடிபடும் நபர்கள் கூட, இரண்டு வாரத்தில் வெள்ளையும் சொல்லையுமாக நடமாடும் பொழுது ..நாம ஏன் எல்லோரையும் பகைச்சுக்கனும்..ஜாலியா போகலாம் ..நாய் பேய்லாம் வாழ முடியுது நம்மலால வாழ முடியாதா என்னும் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது” என அவர் பாணியில் பதிலளித்துள்ளார். எப்போதுமே எல்லா விசயங்களையும் சாதாரணமாக அனுகும் விஜய் சேதுபதியின் பேச்சு பலருக்கு ஃபேவரெட் . எல்லோராலும் அப்படியாக பேசமுடியும். புத்தகத்தில் படிப்பது மட்டும் அறிவு அல்ல. அனுபவமும் அறிவுதான் என்பதுதான் விஜய் சேதுபதியின் கொள்கையாக உள்ளது. புரட்சி என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்காக இருக்க வேண்டும். எனக்கு அரசியலில் விருப்பமில்லை .அதற்குள் என்னை அடக்க முயற்சிக்காதீர்கள் என்கிறார் மக்கள் செல்வன்.