Vijay Sethupathi: சந்தனம் செய்த சம்பவம்.. கோடிகளை கொட்டி கொடுத்த பாலிவுட்.. ஜவான் படத்தில் விஜய்சேதுபதி சம்பளம் இதுதான்!
‘ஜவான்’ படத்திற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜவான்’ படத்திற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
"ராஜா ராணி", "தெறி", "பிகில்", "மெர்சல்" என அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் திரைப்படங்களாக கொடுத்து வரும் இயக்குனர் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். "ஜவான்" திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பாலிவுட் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனும் இப்படத்தில் இணைகிறார்.
View this post on Instagram
சபடத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படும் நிலையில், அண்மையில் படப்பிடிப்பிற்காக சென்னை வந்து இறங்கிய நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன், அட்லீ ஆகியோரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த செய்தியை அவரே அண்மையில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இந்தப்படத்திற்காக விஜய்சேதுபதி 21 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக பிங்க் வில்லா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் படி, “ தனது கேரியரில் விஜய் சேதுபதி அதிகம் சம்பளம் வாங்கிய படம் இது. விக்ரம் படத்தில் தனது நடிப்பு மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்டதையடுத்து இந்த சம்பள உயர்வை அவர் செய்துள்ளார். முன்னதாக ஜவான் படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு படக்குழு அவரை உறுதி செய்தது. இந்தப்படத்திற்காக விஜய்சேதுபதி 2 படங்களை கைவிட்டு இருக்கிறார். இருப்பினும் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. காரணம் இந்தப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம அவ்வளவு வலிமையான கதாபாத்திரம்.முன்னதாக விஜய்சேதுபதி சம்பளமாக 15 கோடி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.