மேலும் அறிய

Vijay Sethupathi | பேமிலி மேன் இயக்குநர்களுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி - விமர்சனங்களை கிளப்பிய புகைப்படம்!

வெப் சீரிஸின் ஈழத் தலைவராக மைம் கோபி நடித்திருந்தார். இவரது கேரக்டருக்கு முதலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டதாகவும் இவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வந்தன.

மனோஜ் பாய்பாய், ப்ரியாமணி, சமந்தா நடிப்பில் ஜூன் மாதம் 'தி பேமிலி மேன் சீசன் 2' வெளியானது. இதை இரட்டை இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே இயக்கியிருந்தார்கள். இந்தியில் மிகவும் பிரபலமானது இவர்களின் டைரக்ஷன். தெலுங்கில் சில படங்களுக்கு புரொடியூசராகவும் இவர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் பேமிலி மேன் சீசன் 2 பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது.  இந்த ட்ரெய்லர் வெளிவந்த நாளிலிருந்தே ஈழப் போராளிகளை தவறாக சித்தரித்துள்ளனர் என பலரும் தங்களை எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். மேலும், இந்த சீரிஸ் வெளியிடவும் கூடாது எனவும் தெரிவித்திருந்தனர். 

இது குறித்து அப்போது விளக்கம் அளித்த இயக்குநர் ''டிரைலரில் உள்ள ஒன்றிரண்டு காட்சிகளை வைத்து முடிவு செய்ய வேண்டாம். எங்களுடைய எழுத்தாளர்கள் குழுவில் பெரும்பாலானோர் தமிழர்கள். நாங்கள் தமிழர்களின் உணர்வுக்கும் கலாசாரத்துக்கும் மதிப்பளிக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். தொடர் வெளியாகும் வரை காத்திருக்கவும். பின்னர் நீங்களே பாராட்டுவீர்கள்''என்றனர். ஆனால் வெப் சீரிஸ் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. சீமான், பாரதிராஜா, வைகோ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


Vijay Sethupathi | பேமிலி மேன் இயக்குநர்களுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி - விமர்சனங்களை கிளப்பிய புகைப்படம்!

இந்த வெப் சீரிஸின் ஈழத் தலைவராக மைம் கோபி நடித்திருந்தார். இவரது கேரக்டருக்கு முதலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டதாகவும் இவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வந்தன. மேலும், ராஜ் அண்ட் டிகே அடுத்து எடுக்கயிருக்கும் 'தி பேமிலி மேன் 3' வெப்சீரிஸில் விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இதுகுறித்து விசாரித்தபோது, 'தி பேமிலி மேன் சீசன் 3' யில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என கூறப்பட்டது. மேலும், ராஜ் அண்ட் டிகே எடுக்கயிருக்கும் வேறொரு புதிய சீரிஸில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவே பேச்சு வார்த்தை நடக்கிறது எனவும் சொல்லப்பட்டது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே உடன் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் புகைப்படமே அது. முன்னதாக நடிகை ராஷிகா, விஜய் சேதுபதியுடன் எடுத்த ஒரு புகைப்படமும் வைரலானது. இந்த வெப் சீரிஸில் நடிகை ராஷி கண்ணா நடிப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழர்களை தவறாக சித்தரித்த சர்ச்சை இயக்குநர்களுடன் விஜய் சேதுபதி இணைந்திருக்கக் கூடாது என பதிவிட்டுள்ளனர்.  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget