25 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் விஜயின் குஷி..ரீரிலீஸ் டிரெய்லர் இதோ
Kushi Rerelease Trailer : எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தின் ரிலீஸை முன்னிட்டு படத்தின் புதிய டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு விஜயின் கில்லி படம் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்ற நிலையில் தற்போது குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
குஷி ரீரிலீஸ்
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததில் இருந்து அவரது படங்களுக்கான மார்கெட் மேலும் அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எச் வினோத் இயக்கும் ஜன நாயகன் படம் சுமார் 300 முதல் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி விற்பனையில் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. அதே நேரம் விஜய் நடிப்பில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களும் ரீரிலீஸில் வசூலை குவித்து வருகின்றன. அந்த வகையில் குஷி படத்தின் ரீரிலீஸ் பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் குஷி . ஜோதிகா , விவேக் , மும்தாஜ் , விஜயகுமார் , ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி மீண்டும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு விஜயின் கில்லி திரைப்படம் உலகம் முழுவதும் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் ரூ 35 கோடி வரை வசூல் செய்து படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னமுக்கு பெரியளவில் கைகொடுத்தது. அந்த வகையில் உலகளவில் குஷி படத்தை மறு வெளியீடு செய்யவிருக்கின்றன
ரீரிலீஸ் டிரெய்லர்
25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் குஷி படத்திற்கு புதிய டிரெய்லர் ஒன்று வெளியாகியுள்ளது. இத்துடன் மீண்டும் இளையதளபதி என்கிற ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Hello folks, #Meendumilayathalapathy 🥰🥰🥰🥰 Once again #KUSHIONCEAGAIN sollanuma sep25th in theatres once again kalakkurom will celebrate Thalapathy @actorvijay 🥰🥰🥰 thx to #jothika , #AmRthnam #Deva && Amarar #Geeva Amarar #vivek and team https://t.co/24I5YWz0EG
— S J Suryah (@iam_SJSuryah) September 18, 2025
ஜனநாயகன் ரிலீஸ்
விஜயின் கடைசி படமாக உருவாகி வரும் ஜன நாயகன் படம் வரும் 2026 ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது . கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல் , பூஜா ஹெக்டே , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் , மமிதா பைஜூ , பிரியாமணி ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள்.





















