பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்...மீண்டும் தனிநீதிபதிக்கு வந்த ஜனநாயகன் வழக்கு...வைரலாகும் மீம்ஸ்
ஜனநாயகன் சென்சார் வழக்கை மறுபடியும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரணைக்கு தலைமை நீதிபதிகளின் உத்தரவை ட்ரோல் செய்து ரசிகர்கல் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க தனிநீதி பிடி ஆஷாவின் உத்தரவை ரத்து செய்த தலைமை நீதிபதிகள் இந்த வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் படத்தின் ரிலீஸில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு மீம்ஸ் வழியாக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஒரு மாத காலமாக சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ளது. இப்படத்தை எப்படியாவது வெளியிட படக்குழு தீவிர முயற்சி எடுத்தும் பயனில்லை. படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கு குழு உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த ஜனவரி 6 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது ஜன நாயகன் படக்குழு. ஜனவரி 7 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதி
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ஜனநாயகன் படத்திற்கு தணிக்கு குழு முதலில் தணிக்கை சான்றிதழ் வழங்குவதாக கூறிவிட்டு பின் மறுதணிக்கை செய்ய முடிவு எடுத்துள்ளது ஏற்கதக்கதல்ல. இதனால் படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.
தனிநீதிபதி உத்தரவுக்கு தடை
தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டன. இன்று நடந்த விசாரணையில் தணிக்கை வாரியத்திற்கு போதுமான அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி போட்ட உத்தரவை ரத்து செய்ததுடன் இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
கடுப்பான ரசிகர்கள்
கடந்த ஒரு மாத காலமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தலைமை நீதிபதிகளின் உத்தரவு மேலும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை கேட்டு படத்தை வெளியிட்டிருந்தால் கூட படம் வெளியாகி மக்கள் அதை கடந்து போயிருப்பார்கள். தனி நீதிபதியிடம் இருந்து தலைமை நீதிபதிக்கு போய் மறுபடியும் தனி நீதிபதிக்கே ஜனநாயகன் சென்சார் வழக்கு வந்து சேர்ந்துள்ளது. கலகலப்பு படத்தில் வரும் 'இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே' என்பது தான் ரசிகர்களின் ரியாக்ஷனாக உள்ளது. தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்





















