ஜனநாயகன் படத்தைப் பற்றி ஒரே ஒரே ட்வீட் போட்ட மதுவந்தி...துவைச்சு தொங்கவிட்ட ரசிகர்கள்
ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் படம் தொடர்பாக பாஜக நிர்வாகி மதுவந்தியின் பதிவு வைரலாகி வருகிறது

நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜயின் ஜனநாயகன் திரைப்படம் நீண்ட மாதங்களாக சென்சார் சிக்கல் மற்றும் சட்டப்போராட்டங்களால் தாமதமான நிலையில், தற்போது படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பல மாதங்களுக்கு முன் வெளியான ஒரு பதிவு மீண்டும் வைரலாகி வருகிறது. ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தடைபட்டிருந்த காலகட்டத்தில், விஜய் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் சென்சார் போர்டை குறிப்பிட்டு, "இப்போ படம் வெளியானால் டைட்டில் கார்டில் 'விஜய்' என்று மட்டுமே வரும். தேர்தலுக்கு பிறகு படம் வெளியானால் 'முதலமைச்சர் விஜய்' என்று வரும்" என்று பதிவிட்டிருந்தனர்.
அந்தப் பதிவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும், சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து வருபவருமான மதுவந்தி தனது எக்ஸ் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்து, சிரிக்கும் எமோஜியை மட்டும் பதிவிட்டிருந்தது அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
நக்கல் செய்த மதுவந்தி
தற்போது அரசியல் சூழல் மாறி, விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஜனநாயகன் வெளியாக உள்ளது. மேலும், படத்தின் தொடக்க டைட்டில் கார்டில் "முதலமைச்சர் விஜய்" என்ற டைட்டில் கார்ட் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பழைய பதிவை மீண்டும் பகிர்ந்து, "இப்போ சிரி பார்க்கலாம்", "அப்போது கிண்டல் செய்தவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?" என மதுவந்தியை குறிவைத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் சென்சார் நடைமுறையை முடிக்க 12 மாற்றங்களை மேற்கொண்ட பிறகே 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது. படத்தின் ஓட்ட நேரம் சுமார் 3 மணி 3 நிமிடங்கள் எனவும், அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்த ஜனநாயகன் திரைப்படம் 6 மாத காத்திருப்புக்குப் பின் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்திருந்தாலும் ரசிகர்களிடம் படத்திற்கு எதிர்பார்ப்பு எந்த விதத்திலும் குறையவில்லை. ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் 100 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
😂😂😂😂😂 https://t.co/QfIj6bSmIv
— Madhuvanthi YG ( Modi Ka Parivar ) (@YGMadhuvanthi) January 17, 2026
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















