மேலும் அறிய
Thalapathy 68 First Look GOAT: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! தளபதி 68 டைட்டில் "G.O.A.T."
Thalapathy 68 First Look GOAT: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலுடன் விஜய் டபுள் ஆக்ஷனில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், தளபதி68
Thalapathy 68 First Look GOAT: லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
G.O.A.T.:
லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்கள் லியோ படத்தை திருவிழாவாக கொண்டாடி ரசித்தனர். லியோ படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது. லியோ படம் உருவாகி வந்த போது விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
பெயரிடப்படாமல் தளபதி 68 என அழைக்கப்படும் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர்.
படத்தை கல்பாத்தி அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்திற்கு சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தற்போது தளபதி 68 படத்தின் ஷூட்டிங் இலங்கையில் வேகமாக நடந்து வருகிறது. சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஐதரபாத் உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Our Thalapathy is the
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023
Greatest Of All Time 🔥🔥🔥🔥#GreatestOfAllTime #Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @thisisysr @actorprashanth… pic.twitter.com/SOgQSGHXEF
அதில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலுடன் விஜய் டபுள் ஆக்ஷனில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தளபதி 68 படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர உள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement