Vijay Deverakonda: சாரா அலிகான் கூட டேட்டிங் பண்ணுவீங்களா..? விஜய்தேவரகொண்டா கொடுத்த பளீச் பதில் இங்கே!
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சாரா அலிகான் விஜய்தேவரகொண்டாவுடன் டேட் செய்ய விரும்புவதாக சொன்ன நிலையில், அது குறித்து விஜய் பேசியிருக்கிறார்.
![Vijay Deverakonda: சாரா அலிகான் கூட டேட்டிங் பண்ணுவீங்களா..? விஜய்தேவரகொண்டா கொடுத்த பளீச் பதில் இங்கே! Vijay Deverakonda Responded to Sara Ali Khan Wanted to date him Comment Koffee With Karan Vijay Deverakonda: சாரா அலிகான் கூட டேட்டிங் பண்ணுவீங்களா..? விஜய்தேவரகொண்டா கொடுத்த பளீச் பதில் இங்கே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/10/12035a13cfec089ca6785f193c491f081660121007537175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சாரா அலிகான் விஜய்தேவரகொண்டாவுடன் டேட் செய்ய விரும்புவதாக சொன்ன நிலையில், அது குறித்து விஜய் பேசியிருக்கிறார்.
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான காஃபி வித் கரண் நிகழ்ச்சியை இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தங்களது பர்சனல் விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பேசுவதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு நிலவி வருகிறது.
View this post on Instagram
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் நடிகை சாரா அலிகான் பங்கேற்றார். அப்போது அவரிடம் நீங்கள் யாருடன் டேட் செய்ய விரும்புகிறீர்கள் என கேட்ட போது, தான் நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் டேட் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த விஜய் “ நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. மிகவும் க்யூட்டாக இருந்தது.. என்னுடைய அன்பு” என்று குறிப்பிட்டு இருந்தார்.
View this post on Instagram
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு விஜய் தேவரகொண்டா பேசியிருக்கிறார். அதில், ஓகே, ஆனால் நான் ஒரு நல்ல நடிகன். நான் சாரா மெசஜ் அனுப்பினேன். அவர் சொன்னது ஒரு இனிமையான விஷயம்.” என்றார். உண்மையில் நீங்கள் சாரா அலிகானுடன் டேட் செய்ய விரும்புகிறார்களா என்று கேட்ட போது, “ என்னால் ரிலேஷன்ஷிப் என்ற வார்த்தையை கூட ஒழுங்காக சொல்ல முடியாது. பின்னர் நான் எப்படி அப்படியான ஒன்றில் இருக்க முடியும்.”என்று பேசினார்.
முன்னதாக,தர்மா தயாரிப்பில் வெளியாகவிருக்கும் லிகர் (Liger) படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் இந்தப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்க உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)