Vijay Devarakonda | விஜய் தேவரகொண்டாவும், மைக் டைசனும் இருக்கும் ஃபோட்டோ பாத்தீங்களா? சீக்ரெட் இதுதான்!
நடிகர் விஜய் தேவரகொண்டா மைக் டைசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, டைசன் குறித்து நெகிழ்ச்சிகரமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளர்.
தெலுங்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமடைந்தவர் விஜய் தேவர கொண்டா. இந்தப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. தமிழில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் வெளியான இந்த ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்தார்.
அந்தப் படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தால் விஜய் தேவர கொண்டாவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து ‘நோட்டா’, ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’, கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது விஜய் தேவரகொண்டா லைகர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பூரி ஜெகநாத் இயக்குகிறார். கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.
லைகர் படத்தை பாலிவூட்டில் முன்னணி தயாரிப்பாளர்களான கரண் ஜோகர் மற்றும் நடிகை சார்மி இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸ்ராக நடிக்கிறார். குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் மைக் டைசனும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. தற்போது லைகர் படக்குழு அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இருவரும் பங்குபெறும் மிக முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளது. இன்று துவங்கியுள்ள இந்தப்படப்பிடிப்பில், மிக முக்கிய காட்சிகள் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த மனிதர் அன்பானவர். ஒவ்வொரு தருணத்தையும் நான் நினைவுகளாக உருவாக்கி வருகிறேன். அதிலும் இது பொக்கிஷமான தருணமாக மாறிவிட்டது. #Liger Vs The Legend.. இரும்பு மனிதரை நேருக்கு நேர் சந்தித்தபோது @MikeTyson” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.