![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vignesh shivan: ‛அறிவை 10 முறை கூப்பிட்டோம்... ஆனால்...’ செஸ் ஒலிம்பியாட் உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்!
44வது செஸ் ஒலிம்பியாட் தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் எழுந்துள்ள பல சர்ச்சைக்கு உள்ளாகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
![Vignesh shivan: ‛அறிவை 10 முறை கூப்பிட்டோம்... ஆனால்...’ செஸ் ஒலிம்பியாட் உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்! vignesh shivan told we ask singer arivu to come more than 10 times to Vignesh shivan: ‛அறிவை 10 முறை கூப்பிட்டோம்... ஆனால்...’ செஸ் ஒலிம்பியாட் உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/3c4e7447b76fbc50af8fa659ff61413e1659788437_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Vignesh shivan :அறிவை 10 முறை கூப்பிட்டோம் - ஆனாலும்..! உன்மையை உடைத்த விக்னேஷ் சிவன்…!
44வது செஸ் ஒலிம்பியாட் தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் துவக்க விழாவில் உலகப் புகழ்பெற்ற பாடலான என்ஜாய் என் சாமி பாடலை பாடகர் தீ மேடையில் பாடி இருந்தார் அதன் பிறகு இந்த பாடலை எழுதி இயக்கி நடித்த அறிவு ஏன் இதில் பங்கு பெறவில்லை , அவரை ஏன் ஒதுக்குகிறிர்கள் என பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன மற்றும் செஸ் ஒலிம்பியாட் டின் ட்ரைலரில் ஏன் செஸ்ல் பிரபலமான விஸ்வநாதன் புகைப்படம் எல்லாம் இடம்பெறவில்லை என்று பலரும் பல கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர் இவை அனைத்திற்கும் தகுந்த பதில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
கேள்வி: வணக்கம் சார், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பாடுவதற்கு பாடகர் அறிவு ஏன் வரவில்லை அப்படிங்கிற கேள்வி கொஞ்ச நாளாவே இருக்கு, இதற்கு பாடகர் அறிவு ஒரு விளக்கம், சந்தோஷ் நாராயணன் ஒரு விளக்கம், பாடகர் தீ ஒரு விளக்கம் என போய்க்கொண்டே இருக்கிறது, இதுக்கு நீங்க என்ன பதில் சொல்ல நினைக்கிறீங்க.
விக்னேஷ் சிவன்: வணக்கம், முதலில் நான் கேட்டுகிறது என்னன்னா விஷயம் முழுசா தெரியாமல் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் அறிவு வரமுடியாத ஒரு சூழ்நிலையில வெளியூர்ல இருக்காரு, நாங்க அவரை 10 முறைக்கு மேல வர வைக்க முயற்சிகள் செய்தோம். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரால் வர முடியவில்லை. அதனால் யாரும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: செஸ் ஒலிம்பியாட் ட்ரெய்லர் வீடியோவில் ஏன் விஸ்வநாதன் ஆனந்த், பிரகா ஆனந்தன் போன்றவர்கள் யாரும் இடம் பெறவில்லை என்ற கேள்வி எழும்பிய வண்ணம் உள்ளன இதற்கு உங்க விளக்கம் என்னவென்று சொல்லுங்க சார்.
விக்னேஷ் சிவன்: முதல்ல நம்ம புரிஞ்சுக்க வேண்டியது என்னவென்றால் அது ஒரு ட்ரெய்லர் வீடியோ அதோட முழு வீடியோல செஸ்க்கு இலக்கணமாக விளங்குற விஸ்வநாதன் ஆனந்த், பிரதானந்தா மற்றும் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன மானுவல் ஆரோன் இவருக்கு இப்போ 83 வயசாகுது. அடையார்ல இருக்கிறார். இவர்கள் அனைவரும் நேரில் சென்று பார்த்து விடியோ எடுத்தோம். இவை எல்லாம் முழு வீடியோவில் இருக்கிறது. ஆனால் ட்ரெய்லரில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர் .ரகுமான் இவர்கள் எல்லாம் இடம்பெற்று இருப்பார்கள். இதை பார்த்த அனைவரும் வாயிற்கு வந்த வதந்திகளை பரப்பத் தொடங்கி விட்டார்கள். நான் முதலில் சொன்ன மாதிரி தான் ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரியாமல் வதந்திகளை பரப்புவது சரியானது அல்ல. அதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாங்கள் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பாடகர் அறிவை இழிவுபடுத்தும் விதமாக எந்த ஒரு செயலும் செய்யவில்லை அவர் இல்லாத இடத்தில் வேறொரு பாடகாரையும் நாங்கள் ரீப்லேஸ் (Replace) செய்யவில்லை, அவர் இல்லை என்றால் வேறு யாரும் இருக்கக் கூடாது ஏனென்றால் என்ஜாய் என்சாமி அவரின் உழைப்பு, அறிவு எழுதிய பதிவில் கூட அவர் செஸ் ஒலிம்பியாட்டிற்கு அவரை அழைக்கவில்லை என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை ஏனென்றால் நாங்கள் அவரை 10 முறைக்கு மேல் அழைத்தோம் அவரால் வர இயலவில்லை அவர் எழுதி வெளியிட்டு இருந்த பதிவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதனால் யாரும் கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் நன்றி....!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)