Vignesh Shivan : அன்று ஃபோன் கவரில்.. இன்று சிவப்பு ஃபெராரி காரில்.. கெத்து பிஜிஎம்மோடு Ferrari ஓட்டிய விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த சொகுசு காரான சிவப்பு ஃபெராரி காரை வாங்கியுள்ளதாக தெரிகிறது
இயக்குநர் விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த சொகுசு காரான சிவப்பு ஃபெராரியை வாங்கியுள்ளார்.
View this post on Instagram
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் இருக்கும் வீடியோவில், “ ரொம்ப நாளா ஃபெராரி காரின் லோகோதான் எனது போனின் கேஸாக இருந்தது. இன்று அந்த காரை டெஸ்ட் ட்ரைவ் செய்கிறேன். இது வேறு மாதிரியான மகிழ்ச்சியை தந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் இன்னோவா காரை வாங்கியிருந்ததும், அதை பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் பூஜைக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
‘போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து ‘நானும் ரெளடிதான்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதி, நயன் தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருந்த இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
View this post on Instagram
விக்னேஷ் அடுத்ததாக அஜித்தின் 62-வது படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.