Vignesh Shivan : த்ரிஷாதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்.. அப்புறமாத்தான் சமந்தா வந்தாங்க.. விக்னேஷ் சிவன் ஜாலி Talk
கதிஜா ரோலுக்கு சமந்தா எப்படி சரியாக இருப்பார் என நினைத்தீர்கள் என்ற கேள்விக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.
சமந்தா இந்தப்படத்தில் கதிஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமந்தா இந்தக் கதாபாத்திரத்திற்கு எப்படி சரியாக இருப்பார் என நினைத்தீர்கள் என்று கேட்டபோது, “சமந்தா இந்தப்படத்திற்குள் வந்தது படத்திற்கு நிறைய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்தப்படம் முன்னமே தொடங்கப்படாததற்கு காரணம் இந்தப் படத்தின் காஸ்டிங் (கதாபாத்திரத்தேர்வு). முதலில் இந்தப்படத்தில் நயன்தாராவும் த்ரிஷாவும் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்க வில்லை. த்ரிஷா இல்லை யென்றதும், நயன்தாராவுக்கு இணையாக, நல்ல நடிப்புத்திறமை கொண்டவரை இதில் காஸ்ட் செய்ய நினைத்தோம்.
View this post on Instagram
அப்போதுதான் சமந்தா இந்தப்படத்தில் நடிப்பாரா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நயன்தாராதான் சமந்தாவிடம் பேசினார். நான் அவரிடம் கதையை சொன்னதும் உடனே சம்மதித்து விட்டார். அதுதான் இந்தப்படத்தை தொடங்கும் போது பாசிட்டிவான விஷயமாக அமைந்தது. அவர் மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா ஆகியோரது நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக ‘போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து ‘நானும் ரெளடிதான்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
View this post on Instagram
அடுத்ததாக அஜித் படத்தை இயக்க இருக்கும் இவர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’ பாடல், வலிமையில் ‘நாங்க வேற மாதிரி’ ‘அம்மா’ உள்ளிட்ட பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார்.