குஜராத்தி படத்தை தயாரிக்கும் நயன்தாரா , விக்னேஷ் சிவன்! - எந்த படத்தின் ரீமேக் தெரியுமா ?
”இது எங்களுடைய முதல் குஜராத்தி சினிமா. புதிய பயணத்தை தொடர ஆர்வமாகவுள்ளோம் “ என குறிப்பிட்டிருக்கிறார்.
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆண்டவன் கட்டளை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் , யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மணிகண்டன் படமாச்சே சொல்லவா வேண்டும் . இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு சொந்தமான ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்து வந்தது. இந்த நிலையில் படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்ய உள்ளார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மல்ஹர் தாக்கர் மற்றும் ரித்திகா சிங் கதாபாத்திரத்தில் மோனல் கஜ்ஜார் ஆகியோர் நடிக்கவுள்ளனர். படத்திற்கு 'சுப் யாத்ரா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை மணீஷ் சைனி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பியூட்டி என்னவென்றால் ஆண்டவன் கட்டளையை இயக்கிய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம்தான் இந்த ரீ மேக்கையும் தயாரிக்கவுள்ளது. இது குறித்து பகிர்ந்துக்கொண்ட இயக்குநரும் தயாரிப்பளருமான விக்னேஷ் சிவன் " குஜராத் சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜோர் நடிப்பில் உருவாக்வுள்ள சுப் யாத்ரா படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இது எங்களுடைய முதல் குஜராத்தி சினிமா. புதிய பயணத்தை தொடர ஆர்வமாகவுள்ளோம் “ என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைபப்டத்தையும் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இதனை தொடர்ந்து காதலர்கள் இருவரும் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram