(Source: Poll of Polls)
Vidhyasagar: 'சூப்பர்சிங்கர் ஸ்டார்களுடன் வித்யாசாகர்..' தந்தையை மகிழ்வித்த மகன் ஹர்ஷவர்தன்..!
சூப்பர் சிங்கர் ஸ்டார்களுடன் இணைந்து வித்யாசாகர் இசையில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களின் கவர் வெர்ஷனை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தன்.

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசை ஜாம்பவான்களின் ஆதிக்கம் நிறைந்து இருந்த தமிழ் சினிமாவில் சிறிதும் சலனமின்றி தனது இசை திறமையால் மெலடி கிங் என ரசிகர்கள் கொண்டாடும் ஒரு இசையமைப்பாளராக உருவெடுத்தவர் வித்யாசாகர். பூமணம் திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது ஜெய்ஹிந்த் திரைப்படம்.
வித்யாசாகர்:
கில்லி, அன்பே சிவம், ரன், பூவெல்லாம் உன் வாசம், கர்ணா, தில், சந்திரமுகி என எக்கச்சக்கமான ஹிட் பாடல்களை கொடுத்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரின் பின்னணி இசை காலம் கடந்தும் பேச கூடிய அளவிற்கு பவர்ஃபுல்லாக அமைந்தன. தனது அசத்தலான இசையால் ரசிகர்களை நெஞ்சங்களை எல்லாம் கட்டிப் போட்டவர்.

சூப்பர் சிங்கர் மேடையில் அப்பா - மகன் :
சமீபத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் சிறப்பு விருந்தினராக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தந்தையை போலவே அவரின் மகனும் இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். சூப்பர் சிங்கர் மேடையில் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்து அப்பாவின் பாடலை பாடி அசத்தி அப்பாவை பெருமை செய்தார். அவர் பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அவரின் பெயர் ஹர்ஷவர்தன்.
லைக்ஸ்களை அள்ளும் கவர் வெர்ஷன் :
தனது இசை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் சூப்பர் சிங்கர் ஸ்டார்கள் சிவாங்கி, மானசி மற்றும் பிரியங்காவுடன் இணைந்து வித்யாசாகர் இசையமைத்த பாடல்களின் கவர் வெர்ஷன் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அவரின் இந்த வீடியோக்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.
View this post on Instagram
இசையமைப்பாளராக அறிமுகம் :
கடந்த 5 ஆண்டுகளாக தென்னிந்திய இசைத்துறையில் கீபோர்டு புரோகிராமராக ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், தமன் ஹொயோரிடம் பணியாற்றி வருகிறார். வித்யாசாகர் மகன் இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் ஆக்ஷன் கலந்த திரில்லர் ஜானரில் உருவாகும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் ஹர்ஷவர்தன் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையை போலவே ஹர்ஷவர்தனும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்க வாழ்த்துக்கள்.





















