மேலும் அறிய

கத்ரீனா - விக்கி கெளஷால் கல்யாணம்; பரபரக்கும் ராஜஸ்தான்: கலெக்டர் ஆலோசனைக் கூட்டம்

பாலிவுட் கனவுக் கன்னி கத்ரீனா கைஃபுக்கும், நடிகர் விக்கி கெளஷாலுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கடந்த ஒரு மாதமாகவே தகவல்கள் வெளியாகின.

பாலிவுட் கனவுக் கன்னி கத்ரீனா கைஃபுக்கும், நடிகர் விக்கி கெளஷாலுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கடந்த ஒரு மாதமாகவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கத்ரீனா - விக்கி கெளஷால்  திருமணம் டிசம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது

நடிகர்கள் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்ததில் இருந்து பாலிவுட் வட்டாரம் பரபரப்பாக பேசப்படும் நபர்களாக மாறினர். 
இந்நிலையில்,  ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம், சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பார்வாரா ஓட்டலில் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. (Six Senses Fort Barwara, Sawai Madhopur district, Rajasthan).

இதனையொட்டி இன்று வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர கிஷன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சிங், ஏடிஎம் சூரஜ் சிங் நேகி, ஓட்டல் அதிகாரிகள், திருமணத்தை ஒருங்கிணைத்து நடத்தும் ஈவன்ட் கம்பெனி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இது ஒரு ஹை ப்ரொஃபைல் திருமணம் என்பதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் திருமணத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், விதிகளுக்கு உட்பட்டு திருமணத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 7 தொடங்கி டிசம்பர் 9 வரை திருமண விழா நடைபெறவுள்ளது. திரைப்பட இயக்குநர் கபீர் கான், தயாரிப்பாளர் அம்ரித் பால் சிங் பிந்த்ரா, இயக்குநர் ஆனந்த் திவாரி உள்ளிட்டோர் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

திருமணத்துக்கு அழைக்கப்படும் விருந்தினர்களுக்கே பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி:
திருமணத்துக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்ற தகவலை வெளியிடக்கூடாது
திருமண அரங்குக்குள் புகைப்படம் எடுக்கக் கூடாது
திருமணம் தொடர்பான லொகேஷன், புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிரக் கூடாது
திருமணத்துக்கு வந்தவர்கள் வெளியேறும் வரை வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்கக் கூடாது
திருமண ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி பெற்ற பிறகே புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிரலாம்
திருமண அரங்குக்குள் ரீல்ஸ் எடுப்பதோ,வீடியோ எடுப்பதோ கூடாது எனக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி ஒமிக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் அது தொடர்பான கட்டுப்பாடுகளும் அதிகம் இருக்குமென தெரிகிறது. குறிப்பாக பலர் வெளிநாட்டில் இருந்து வருவார்கள் என்பதால் அதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், திருமணத்துக்கு வருபவர்களுக்கு ரகசிய எண்கள் கொடுக்கப்படும் என்றும், இந்த எண்களை குறிப்பிட்டுத்தான் திருமணம் நடக்கும் இடத்துக்குள் நுழைய வேண்டும் எனவும் தகவல் கசிந்துள்ளது. 

ஹாங்காங்கில் பிறந்த கத்ரீனா கைஃபின் தந்தை முகம்மது கைஃப் ஒரு காஷ்மீரி, அவரது தாயார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். கத்ரீனா இளம் வயதாக இருந்த போதே பெற்றோர் விவாகரத்து பெற்றனர். ஹாங்காங்கில் வளர்ந்த கைஃப் அதன்பின்னர் அவரது அம்மாவுடன் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார். 2010 இல் இவரது முதல் படமான ராஜ்நீதியில் ரன்பீர் கப்பூருடன் இணைந்து நடித்தார். தற்போது கத்ரீனாவுக்கு 38 வயதாகிறது. இந்நிலையில் நீண்ட காலமாகவே கத்ரீனா, விக்கி கெளஷாலை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. விக்கி கெளஷால் பிரபல இயக்குநர் ஷாம் கெளஷாலின் மகன். பொறியியல் பட்டதாரியான இவர் பாலிவுட்டில் தடம் பதித்தார். கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர் என்ற திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்பிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2018 ஆம் ஆண்டில் ராஸி மற்றும் சஞ்சு ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget