மேலும் அறிய
Advertisement
Viduthalai: சர்வதேச விழாவில் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்த கரவொலி: ஏகபோகமாக பெயர் வாங்கிய வெற்றிமாறனின் 'விடுதலை'
Viduthalai Part 1 & 2: ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் விடுதலை பாகம்-1, விடுதலை பாகம்-2 திரையிடப்பட்டது.
Viduthalai Part 1 & 2: ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம்-1 மற்றும் விடுதலை பாகம்-2 படங்களுக்கு 5 நிமிடங்கள் கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம்-1 படம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரைக்கு வந்தது. எல்ரெட் குமார் தயாரித்த விடுதலை பாகம்-1ல் விஜய் சேதுபதி, சூரி, அப்புக்குட்டி, பவானி என பலர் நடித்துள்ளனர். நடுத்தர மக்களின் மீது நடத்தப்பட்ட அதிகார அடக்குமுறையை கூறிய விடுதலை பாகம் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், வசூலிலும் நல்ல வரவேற்பையும் பெற்றது.
மேலும் உள்ளூர் எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி உலக அளவில் விடுதலை பாகம் -1 படத்துக்கு வரவேற்புகள் இருந்தன. விடுதலை பாகம் ஒன்றைத் தொடர்ந்து, விடுதலை பாகம் -2 படப்பிடிப்பில் வெற்றிமாறன் பிசியாக இருந்தார்.
இந்த நிலையில் விடுதலை பாகம்-1 மற்றும் விடுதலை பாகம்-2 படங்கள் சர்வதேச அளவில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முன்னதாகத் திரையிடப்பட்டன. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் விடுதலை பாகம்-1, விடுதலை பாகம்-2 திரையிடப்படும் என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் முன்னதாக அறிவித்திருந்தார்.
விழாவில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள நிலையில், இவ்விழாவில் வெற்றிமாறன் படைப்பின் முழு கதையை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விடுதலை பாகம் - 1 மற்றும் பாகம் - 2 படங்களுக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு 5 நிமிடங்கள் கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒரு சிறந்த படைப்பை பாராட்டுவதற்கு தொடர் கைத்தட்டல்கள் வழங்கி அங்கிருக்கும் சினிமா ஆர்வலர்கள் கௌரவிப்பது வழக்கம். இந்நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக சர்வதேச அளவில் விடுதலை படம் திரையிடுவது குறித்து அதன் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசும்போது, “ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா போன்ற உலகின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வுகளில் விடுதலை படம் மூலம் நமது இந்தியத் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்களுக்கு பெருமையும் மரியாதையும் அளிக்கிறது.#Viduthalai Part 1 & 2 The film receives a thunderous standing ovation at @IFFR! Powerful 5-minute applause resonates with the impactful storytelling and stellar performances at #RotterdamFilmFestival
— Red Giant Movies (@RedGiantMovies_) February 1, 2024
An @ilaiyaraaja Musical#VetriMaaran @VijaySethuOffl @sooriofficial… pic.twitter.com/ov1w4TmtQd
மிகவும் புகழ்பெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தங்களது படத்தையும் திரையிட வேண்டும் என்பது சினிமாவில் பலருடைய கனவு. இந்த வாய்ப்பு இப்போது எங்களுக்கு கிடைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சிய அடைகிறோம். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். பல நம்பிக்கையூட்டும் கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றிப் பெற்றுள்ளது. இது சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த வரிசையில் விடுதலை படம் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையில்லாத மகிழ்சியைக் கொடுத்துள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: Thalapathy Vijay: உன்னுடன் வேலை பார்க்க முடியாது.. விஜய்யிடம் வெளிப்படையாக சொன்ன மிஷ்கின்.. என்னாச்சு?
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion