STR49: சிம்பு படம் அப்டேட் விரைவில்.. 50 வயதை தொட்ட வெற்றிமாறன்.. ப்ரோமோ வீடியோ மாஸா இருக்கே!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படம் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியானது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். பத்து தல படத்திற்கு பிறகு நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் கல்லூரி இளைஞராக நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் வரலாற்று கதையை தேர்வு செய்து அதற்கான கெட்டப்புகளில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.
லைன் அப்பில் பல படங்கள்
பின்னர் டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். லைன்அப்பில் பல படங்களில் கமிட் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது குறித்த செய்திகள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இப்படம் தொடர்பான ப்ரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பும் நடைபெற்றது. இதனிடையே சிம்பு - வெற்றிமாறனுக்கும் கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நின்று போனதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறன் இன்னும் 10 நாட்களில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்தார்.
வெற்றிமாறன் - சிம்பு படம் குறித்த அப்டேட்
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சமூகவலைதளத்தில் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் பிறந்தநாளான இன்று அந்த சர்ப்ரைஸான ப்ரோமோ வெளியானது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும், விரைவில் STR49 படம் குறித்த முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவான கமெண்ட்களால் இணையத்தை கலங்கடித்து வருகின்றனர். ப்ரோமோ வீடியோவில் வடசென்னையை மையமாக வைத்து கதை உருவாகிறது என்பது தெரிகிறது. ஆனால், வடசென்னை 2 அல்லது ராஜன் வகையறா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. கையில் ரத்தம் படிந்த கத்தியோடு சிம்பு நடந்து செல்வது போன்று இருக்கிறது.





















