மேலும் அறிய

Actress Leelavathi: தமிழ் திரையுலகில் சோகம்.. ரஜினி பட நடிகை காலமானார்!

Actress Leelavathi: தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள மூத்த நடிகை லீலாவதி காலமானார்.

நடிகர் ரஜினிகாந்த் உடன் அவர்கள், நடிகர் கமல்ஹாடனுடன் அவள் ஒரு தொடர்கதை, பட்டினத்தார், நான் அவனில்லை, வளர்பிறை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை லீலாவதி உடல்நலக்குறைவால் இன்று (டிச.08) காலமானார். 

Actress Leelavathi: தமிழ் திரையுலகில் சோகம்.. ரஜினி பட நடிகை காலமானார்!

85  வயதான பழம்பெரும் நடிகை லீலாவதி, உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் குறைநத ரத்த அழுத்தம் காரணமாக நெலமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் நடிகை சுஜாதாவின் தாயாராக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டவர் நடிகை லீலாவதி. தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மொழி படங்கள் என 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

உடல்நல குறைவு :

நடிகை லீலாவதியின் மகன் வினோத் ராஜூவும் ஒரு நடிகராவார். பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி என மலைப்பகுதியில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக பல ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் படுத்தப்படுகையாக இருந்து வந்தார். இந்த நிலையில் தான் இன்று மதியம் அவரின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

டாக்டர் பட்டம் :

நடிகை லீலாவதி முன்னணி நடிகர்களான ராஜ்குமார், என்.டி. ராமராவ், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாசன், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், சுதீப் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 2008ம் ஆண்டு தும்கூர் பல்கலைக்கழகம் இவரின் கலைப்பயணத்தை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 

பழம்பெரும் நடிகை லீலாவதியின் மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தாருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்

2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 

Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு

School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?Tiruppur Murder : ’’புருஷன் சாவுக்கு நீங்கதான் காரணம்’’மனைவி சரமாரி கேள்வி!திக்குமுக்காடிய அமைச்சர்..Ponmudi Angry on narikuravar : வீடுகேட்ட நரிக்குறவர்! மிரட்டிய பொன்முடி! ”யோவ் சும்மா இருய்யா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?

புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 

Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு

Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!

Embed widget