Venkatesh Iyer: தளபதி பாட்டுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் - வைரலாகும் வீடியோ.!
Venkatesh Iyer: கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Venkatesh Iyer: கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் விஜய்க்கு தனி இடம் உண்டு. குறிப்பாக அவருக்கு தமிழ்நாடு கடந்து மற்ற மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் மிக அதிகமாக உள்ளது. அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளசுகள் தொடங்கி பல்வேறு துறையில் உள்ளவர்கள் கூட விஜய் திரைப்படம் வந்துவிட்டால் தனி குஷிக்கு வந்து விடுவார்கள். இந்திய கிரிக்கெட் வீரர்களில் தற்போது வளர்ந்து வரும் வீரர்களில் முக்கியமான நபராக இருப்பவர் வெங்கடேஷ் ஐயர். இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Venkatesh Iyer Grooving on #NaaReady Song from #Leo !! 🥳🕺#Leo | @actorvijay | #LeoFilmpic.twitter.com/JrJi77KlSA
— Saravanan Hari 💛🦁🏏 (@CricSuperFan) July 1, 2023
லியோ படக்குழு வெளியிட்டுள்ள ‘நான் ரெடி தான் வரவா” பாடலுக்கு வெங்கடேஷ் ஐயர் நடனமாடியுள்ள வீடியோவுக்கு பலரும் கமெண்ட்களை வாரி வழங்கி வருகின்றனர்.
மாஸ்டர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், ஜோஜூ ஜார்ஜ் என இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் லியோ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் 3 மாதங்களும், அதனைத் தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது இன்னும் சில நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அடுத்தடுத்து இனி லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
நா ரெடி பாடலால் தொடரும் சர்ச்சை
இதனிடையே கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ பாடல் வெளியானது. இதனை விஷ்ணு எடாவன் எழுதிய நிலையில், நடிகர் விஜய் , ராப் பாடகர் அசல் கோலார் இருவரும் பாடியிருந்தனர். இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், கடும் சர்ச்சைகளையும் சந்தித்தது. ஜூன் 16 ஆம் தேதி வெளியான லியோ பட போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்த மாதிரி காட்சி இடம் பெற்றிருந்தது சர்ச்சையானது.