The GOAT Trailer : அண்ணன் வராரு வழிவுடு...மக்களே தி கோட் படத்தின் அப்டேட் இதோ...
The GOAT update :'தி கோட்' படத்தின் டிரைலர் அப்டேட் குறித்த தகவல் நாளை மாலஒ 6 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 68' திரைப்படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம், மோகன், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளர்.
உலகெங்கிலும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் 'தி கோட்' படம் குறித்த அப்டேட் எதுவும் பெரிய அளவில் வெளிவராதது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது. இப்படத்தின் விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. கூடுதலாக ஐ மேக்ஸ்,இபிஐக்யூ தொழில்நுட்ப திரைகளில் வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது. இது தவிர படம் குறித்த வேறு எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் கூட இல்லாத சூழல் படத்தின் டிரைலர் கூட இதுவரையில் வெளியாகாதது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.
இந்நிலையில் நேற்று 'தி கோட்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் அப்டேட் குறித்த போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். படத்தின் பிரமாண்டமான டிரைலர் தற்போது தீவிரமாக தயராகி வருகிறது. அதனால் ஒரு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள் என ஒரு போஸ்ட் பகிர்ந்து இருந்தார். எனவே டிரைலர் ரிலீஸ் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்று இன்று வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய் படம் என்றாலே வெளியாகும் வரையில் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி ரசிகர்களை குஷியாகவே வைத்திருக்கும். ஆனால் இந்த முறை அது மிஸ்ஸிங். நடிகர் விஜய் இன்னும் இரண்டே படங்களுடன் நடிப்பில் இருந்து ரிட்டைர்மென்ட் வாங்க உள்ளார், வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் முதல் படம், பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இப்படி பல ஸ்பெஷலிட்டி நிறைந்த படம் என்பதால் எதிர்பார்ப்பும் கூடுதலாக இருக்கிறது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி தி கோட் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் நாளை ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்