மேலும் அறிய

Vela Ramamoorthy: நல்லகண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ள வேல ராமமூர்த்தி.. எந்தப் படம் தெரியுமா?

“திரைப்பயணம் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எவருக்கும் கிடைக்காத வரம் எனக்கு கிடைத்துள்ளது. எதிலும் இல்லாத பெயர், புகழ் இருக்கிறது”

பெயரும்,புகழும் தந்துள்ள இந்த மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சேதுபதி, கொம்பன், கிடாரி, ரஜினி முருகன், அப்பா, அண்ணாத்த, எனை நோக்கி பாயும் தோட்டா என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதேசமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். 

இப்படியான நிலையில் வேல ராமமூர்த்தி நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ளார். அதாவது, “திரைப்பயணம் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எவருக்கும் கிடைக்காத வரம் எனக்கு கிடைத்துள்ளது. எதிலும் இல்லாத பெயர், புகழ் இருக்கிறது. நடிகருக்கும் நடிகைக்கும் இந்த சமூகம் கொடுக்கும் மரியாதை என்பது உலகில் எங்கு சென்றாலும் கிடைக்கிறது. இந்த சமூகத்துக்கு எவ்வளவு நாம் கடன்பட்டுள்ளோம் என்பது தெரியுமா?. இவ்வளவு அன்பையும் மரியாதையும் வச்சிகிட்டு நம்மை கொண்டாடும் இந்த சமூகத்துக்கு, மக்களுக்கு மற்ற எல்லாரையும் விட நாம் அதிகமாக கடன்பட்டுள்ளோம். இந்த வாழ்க்கையை நான் நினைத்தே பார்க்கவில்லை. 

நான் ஆசைப்பட்ட மாதிரி ஒரு நல்ல கேரக்டர் கிடைத்து அதில் நடித்து முடித்து விட்டேன். குருவிக்காரன் என்ற படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். அதே கெட்டப், வேட்டி, துண்டு, கண்ணாடி, நடை என அவராகவே நடித்துள்ளேன்.

இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் எனப் பலரும் நடித்துள்ளனர். சிங்காநல்லூரில் தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீட்டில் தான் ஷூட்டிங் நடைபெற்றது. அவர் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்து நடித்த அனுபவம் எல்லாம் யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். இதெல்லாம் மறக்க முடியாதவை" என வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். 

அவர் தெரிவித்த குருவிக்காரன் படத்தை ராக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர், நடிகர் சசிகுமார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Captain Dhoni: மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?
மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?
TN BJP Leader: யாருங்க அந்த தலைவரு? நயினார் நாகேந்திரன், ஆனந்தனுக்கு வாய்ப்பில்லையா? பாஜக அறிவிப்பால் புது சிக்கல்!
TN BJP Leader: யாருங்க அந்த தலைவரு? நயினார் நாகேந்திரன், ஆனந்தனுக்கு வாய்ப்பில்லையா? பாஜக அறிவிப்பால் புது சிக்கல்!
TN BJP President Election: பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார்.?.. யூகங்களுக்கு முற்றுப்புள்ளி.. தேர்தலை அறிவித்த தலைமை...
பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார்.?.. யூகங்களுக்கு முற்றுப்புள்ளி.. தேர்தலை அறிவித்த தலைமை...
தமிழக பாஜக தலைவர் ரேசில் ட்விஸ்ட்.. நயினாரை ஓவர்டேக் செய்த தென்காசிக்காரர்.. கைகாட்டிய ஆர்எஸ்எஸ்
தமிழக பாஜக தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. நயினாரை ஓவர்டேக் செய்த தென்காசிக்காரர்.. யாருப்பா அது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai | ”தலைவர் பதவி இல்லைனா? மொத்தமும் போச்சே” புலம்பும் அண்ணாமலை! | Amit  ShahTN BJP LEADER NAINAR NAGENDRAN: டெல்லி பறந்த நயினார்!பாஜக தலைவர் UPDATE அமித்ஷா அறிவிப்பு? | BJPNTK BJP Alliance : சீமானுடன் முடிந்த டீல்.. பாஜகவில் மெகா கூட்டணி! அண்ணாமலை ஸ்கெட்ச் 2026Seeman meets Nirmala Sitharaman:  நிர்மலாவை சந்தித்தாரா சீமான்? பாஜக போடும் ஸ்கெட்ச்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Captain Dhoni: மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?
மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?
TN BJP Leader: யாருங்க அந்த தலைவரு? நயினார் நாகேந்திரன், ஆனந்தனுக்கு வாய்ப்பில்லையா? பாஜக அறிவிப்பால் புது சிக்கல்!
TN BJP Leader: யாருங்க அந்த தலைவரு? நயினார் நாகேந்திரன், ஆனந்தனுக்கு வாய்ப்பில்லையா? பாஜக அறிவிப்பால் புது சிக்கல்!
TN BJP President Election: பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார்.?.. யூகங்களுக்கு முற்றுப்புள்ளி.. தேர்தலை அறிவித்த தலைமை...
பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார்.?.. யூகங்களுக்கு முற்றுப்புள்ளி.. தேர்தலை அறிவித்த தலைமை...
தமிழக பாஜக தலைவர் ரேசில் ட்விஸ்ட்.. நயினாரை ஓவர்டேக் செய்த தென்காசிக்காரர்.. கைகாட்டிய ஆர்எஸ்எஸ்
தமிழக பாஜக தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. நயினாரை ஓவர்டேக் செய்த தென்காசிக்காரர்.. யாருப்பா அது?
Good Bad Ugly: முதல் நாளே இணையத்தில் லீக் ஆன ‘குட் பேட் அக்லி’ - அஜித் படக்குழு அதிர்ச்சி
Good Bad Ugly: முதல் நாளே இணையத்தில் லீக் ஆன ‘குட் பேட் அக்லி’ - அஜித் படக்குழு அதிர்ச்சி
வெளியானது அரசு உத்தரவு! இனி தண்ணீர் பில் இவ்வளவு கூடும்! யாருக்கு எவ்வளவுன்னு பாருங்க!
வெளியானது அரசு உத்தரவு! இனி தண்ணீர் பில் இவ்வளவு கூடும்! யாருக்கு எவ்வளவுன்னு பாருங்க!
பூப்பெய்திய மாணவியை வெளியே அமரவைத்த பள்ளி- சர்ச்சையானதை அடுத்து முதல்வர் சஸ்பெண்ட்!
பூப்பெய்திய மாணவியை வெளியே அமரவைத்த பள்ளி- சர்ச்சையானதை அடுத்து முதல்வர் சஸ்பெண்ட்!
பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை.. நடவடிக்கை பாயுமா.?
பூப்பெய்திய மாணவிக்கு பள்ளியில் நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை.. நடவடிக்கை பாயுமா.?
Embed widget