மேலும் அறிய

The GOAT: விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்..? விசிக எம்.பி கேட்ட கேள்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார், தன் எக்ஸ் பக்கத்தில், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார், தன் எக்ஸ் பக்கத்தில், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளியானது தி கோட் திரைப்படம்:

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் இன்று (செப்டம்பர் 5)வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அதே போல் இந்த படத்தில் சினேகா,த்ரிஷா, மீனாட்சி சாவுத்ரி, பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இன்று வெளியான இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக கண்டுகளித்து வருகின்றனர்.  இந்த படம்தான் விஜய்யின் கடைசி படம் என அவரே சொல்லிவிட்டார். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறின. விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடுகிறது. இதனால் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகள் ஏதாவது இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்தது.

விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

இந்நிலையில் விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? என கேள்வி எழுப்பி விசிக எம்பி ரவிக்குமார் சமூகவலைத்தள பக்கமான எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)' என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget