Varun Tej - Lavanya Tripathi: திருமணத்திற்கு ரெடியான வருண் தேஜ், லாவண்யா திரிபாதி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
லாவண்யாவும் தெலுங்கு நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் தெலுங்கில் ஒன்றாக சேர்ந்து நான்கு படங்களில் நடித்துள்ளனர்.
![Varun Tej - Lavanya Tripathi: திருமணத்திற்கு ரெடியான வருண் தேஜ், லாவண்யா திரிபாதி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் Varun Tej Lavanya Tripathi engagement set to tie the knot on November 1 Varun Tej - Lavanya Tripathi: திருமணத்திற்கு ரெடியான வருண் தேஜ், லாவண்யா திரிபாதி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/759d3cc5cfdd78b43600cd884702a1671698497371914333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜும், நடிகை லாவண்யா திரிபாதி திருமண விழாவில் ராம் சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் சசிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மன் நடத்தில் நடித்தவர் லாவண்யா. இவர் தொடர்ந்து மாயவன் உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் லாவண்யாவும் தெலுங்கு நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் தெலுங்கில் ஒன்றாக சேர்ந்து நான்கு படங்களில் நடித்துள்ளனர்.
2017ம் ஆண்டு மிஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி காதலிக்க தொடங்கினர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து கடந்த ஜூன் 9ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் ஒன்றாம் தேதி திருமணம் என்ற அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பிறகு நவம்பர் ஐந்தாம் தேதி ஐதரபாத்தில் நிச்சயதார்த்தம் என்ற அறிவிப்பையும் இருவரும் பகிர்ந்துள்ளனர். வருண் தேஜ் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணின் சகோதரின் மகன் என்பதால் திருமண நிகழ்வில் திரையுலகை சேர்ந்த அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இவர்கள் தவிர அல்லு அர்ஜூன் மற்றும் பவன் கல்யாண் உள்ளிட்டோரின் குடும்பங்களும் திருமணத்தில் இடம்பெற்றனர்.
திருமணத்திற்கு முன்னதாக வரும் 30 மற்றும் 31ம் தேதி மெஹந்தி மற்றும் ஹல்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளாதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே இணையத்தில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Found my Lav!♥️@Itslavanya pic.twitter.com/OCyhWcIjMq
— Varun Tej Konidela (@IAmVarunTej) June 9, 2023
திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் இன்று காக்டெய்ல் பார்ட்டியுடன் தொடங்கியது. திருமண அழைப்பிதழின் படி, மணமகனும், மணமகளும் சிறந்த முறையில் தயாராகி திருமனத்திற்கு வருவோருக்கு வரவேற்பு அளித்தனர். இந்த காக்டெய்ல் பார்ட்டியில் நடிகர் ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் தங்களின் மனைவியுடன் வந்து பங்கேற்றனர். வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி திருமணம் நாளை இத்தாலியில் உள்ள டஸ்கனியில் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஹல்தி மற்றும் மெஹந்தி விழாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)