மேலும் அறிய

Cinema Round-up : வெளியாகும் வாரிசு படத்தின் ட்ரெய்லர்.. நாகூர் தர்காவிற்கு சென்ற ஏ.ஆர்.ஆர்.. இன்றைய சினிமா ரவுண்டப்!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், வாரிசு மற்றும் துணிவு படம் குறித்த தகவல்கள் கோலிவுட்டை சூழ்ந்து வருகிறது

வாரிசு படத்தின் ட்ரெய்லர்

துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற காரணத்தினால், அதை விட சிறந்த ட்ரெய்லரை கொடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்ததாகவும் அத்துடன், எடிட் செய்ப்பட்டிருந்த ட்ரெய்லரை மீண்டும் எடிட் வேலைக்காக அனுப்பியதாகவும், இதனால்தான் ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திப்போனதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. மேலும் ட்ரெய்லரானது சன் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாகூர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ஆர்

ரசிகர்களால் இசைப்புயல் என செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கந்தூரி விழாவில் கலந்து கொண்டார். இவருடன், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானும்  பங்கேற்றார். இவர்கள் மட்டுமன்றி, இந்த கந்தூரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏ ஆர் ரஹ்மான் சந்தன கூடு திருவிழாவில் பங்கேற்ற வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

வாரிசு படத்திற்கு கிடைத்த சான்றிதழ்

வாரிசு படக்குழு தங்களின் படத்தை சென்சார் தணிக்கைகுழுவிற்கு அனுப்பியுள்ளது. 2 மணி நேரம் மற்றும்  49  நிமிட நீளத்தை கொண்ட  ‘வாரிசு’ படத்திற்கு U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால், இன்று வரை துணிவு மற்றும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது.

வாரிசு, துணிவு படத்தின் ரிலீஸ் எப்போது?

View this post on Instagram
 
A post shared by Ariesplex SL Cinemas (@ariesplexslcinemas)

பொங்கலுக்கு இன்னும் ஒரு  வாரமே உள்ள நிலையில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள Aries Plex SL  சினிமா தியேட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதியும், வாரிசு படம் ஜனவரி 12 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருபடங்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும், முதல் காட்சி அதிகாலை 4 மணி எனவும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், இரு படங்களின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலுடன் ஒத்துப்போவதால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர். 

100 கோடி உரிமம் பெற்ற சூர்யா 42

சூர்யா சிறுத்தை சிவா இணைந்துள்ள சூர்யா 42 திரைப்படத்தின் ஹிந்தி உரிமையை 100 கோடிக்கு தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது; அதுமட்டுமின்றி அந்த படத்தின் ஹிந்தி வெர்சனின் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் விநியோக உரிமைகளையும் அவர் கைப்பற்றியுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது; இதுவரை  முன்னதாக எந்த தமிழ் திரைப்படமும் 100 கோடிக்கு விலை போனதில்லை. 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget