மேலும் அறிய

Varisu : வாரிசு படத்தின் சூப்பர் அப்டேட் உண்மையா? - தயாரிப்பாளர் தில் ராஜூ தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் இந்தியிலும் வெளியாக உள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பொங்கலுக்கு வெளியாகுமா இல்லையா எனும் தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது. முன்னதாக படம் வெளியாவதில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் முடிவுக்கு வந்தது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடந்து வாரிசு திரைப்படம் குறித்த மேலும் ஒரு புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி சந்தோஷத்தை இரட்டிப்பாகியுள்ளது.  

Varisu : வாரிசு படத்தின் சூப்பர் அப்டேட் உண்மையா? - தயாரிப்பாளர் தில் ராஜூ தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்தியில் வாரிசு :

தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட 'வாரிசு' திரைப்படம் இந்தியிலும் வெளியாக உள்ளது எனும் அதிகாரப்பூர்வமான தகவலை தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இருப்பினும் இதுவரை வாரிசு படத்தின் இந்தி போஸ்டரும் வெளியாகவில்லை. மேலும் வாரிசு படத்தின் இந்தி வெர்ஷன் பொங்கலுக்கு வெளியாகிறதா  இல்லையா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. விரைவில் வாரிசு படத்தின் இந்தி டப்பிங் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

செகண்ட் சிங்கிள் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வம் :

நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமன் இசையமைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்  சிங்கிள் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே..." பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் பாடியுள்ள இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. சிம்பு பாடிய இந்த பெப்பியான பாடல் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து விஜய் - சிம்பு ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்றும் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.   

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget