Varisu First single: தளபதி ஃபேன்ஸ் ரெடியா... தீபாவளி பரிசு ரெடி... வருகிறது வாரிசு முதல் பாடல்!
Varisu First single : நடிகர் விஜயின், வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளியையொட்டி வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது
தீபாவளியையொட்டி, வரும் அக்டோபர் 23 ஆம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தகவல் வெளியாகிவுள்ளது. விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கல் ரிலீஸ் என தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
View this post on Instagram
வாரிசு படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி, மக்களின் வரவேற்ப்பை பெற்றது. விஜய் ரசிகர்களின் மனதில் ஒருபக்கம் எதிர்ப்பார்ப்பு இருக்க மறுபக்கம், படம் சுமாராக இருக்குமோ என்ற பயமும் இருந்து வருகிறது. கடந்த முறை பீஸ்ட் படத்திற்கு பில்-அப் கொடுத்து காரியத்தை கெடுத்த படக்குழுவினரை, விஜய் ரசிகர்கள் பாரபட்சம் பார்க்காமல், திட்டி தீர்த்தனர். தமிழ் புத்தாண்டுக்கு கடுப்பான விஜய் ரசிகர்கள், “ தளபதி இல்லாத தீபாவளியே இல்லை. சன் டி.வியில் தீபாவளிக்கு பீஸ்ட் படம் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது” என ட்வீட் செய்து அவர்களின் பொங்கி வரும் உணர்வுகளை ஷேர் செய்து வருகின்றனர்.
#VarisuFirstSingle arriving at DIWALI 💥💥
— Robin (@Robincinema) October 16, 2022
Gonna be fireee @MusicThaman 💥💥💥🥁🥁🥁 pic.twitter.com/mDkLQrJryD
படம் பொங்கலுக்கு வெளியானலும், படத்தின் முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது என்ற தகவல் பரவி வருகிறது. இதைப்பற்றிய அதிகாரபூர்வ தகவல், அக்டோபர் 20 அல்லது 21 ஆம் தேதி வெளியாகும் எனவும் பேசப்படுகிறது.இவை அனைத்தும், இசையமைப்பாளர் தமனின், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு பின் கிளப்பட்ட தகவல் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : AK 62 : அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு நடிக்க போவதில்லை.. அஜித் எடுத்த அதிரடி முடிவு... காரணம் இது தான்!