மேலும் அறிய

Varaha Roopam Song Issue: தடையை நீக்கிய நீதிமன்றம்.. மீண்டும் வந்த ‘வராஹ ரூபம்’.. மகிழ்ச்சியில் ‘காந்தாரா’ ரசிகர்கள்!

Varaha Roopam Song Issue: காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வராஹரூபம் பாடல் மீது விதித்திருந்த தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இந்திய திரையுலகில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வாராக ரூபம்  பாடல் மீது விதித்திருந்த தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.

திரையுலகினர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் காந்தாரா.  கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிலையில் வசூலிலும் ரூ.400 கோடியை கடந்தது. காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. 

இதன் காரணமாக அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு காந்தாரா வெளியானது. இப்படம்  நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. மேலும் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் தொடங்கி ஒட்டுமொத்த திரையுலகமே இப்படத்தை கொண்டாடியது.

View this post on Instagram
 
A post shared by Hombale Films (@hombalefilms)

ஓடிடியில் காந்தாரா:

திரையரங்குகளில் வெளியாகி பலரையும் கவர்ந்த காந்தாரா, நேற்று ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மீண்டும நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், வாராஹ ரூபம் பாடலின்றி இப்படத்தை பார்க்க பலரும் விருப்பப்படவில்லை என்ற கருத்தும் நிலவி வந்தது. அந்த பாடல் நீக்கத்திற்கு காரணம், தைகுடம் பிரிட்ஜ் என்ற இசை குழு தங்கள் இசையை திருடிவிட்டதாக கூறி வழக்கு தொடர்ந்ததே 

நடந்தது என்ன?

சில வாரங்களுக்கு முன்பு  ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தைக்குடம் பிரிட்ஜ் பேண்ட் குழுவினர் கோழிக்கோடு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலையாள மொழியில் தனிப்பாடல்களை இயற்றி வரும் இந்த இசைக்குழு 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட நவரசம் பாடலின் காப்பிதான் வராஹ ரூபம் பாடல் என்பதால் காப்புரிமையை காக்க வழக்கு தொடரப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதிகள் அமேசான், யூடியூப், ஸ்பாடிஃபை, விங்க் மியூசிக், ஜியோ சவான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், தியேட்டர்களில் பாடலை பயன்படுத்தக் கூடாது  என தடை விதித்தனர். இதனால் இப்பாடல் அமேசான் பிரைமில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வராஹ ரூபம் பாடல் தடை நீக்கம்

இந்த நிலையில், வராஹ ரூபம் பாடலை படத்தில் கேட்காமல் தவித்துவந்த ரசிகர்களுக்கு இன்ப செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ஆம், தைக்குடம் பிரிடஜ்  ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை கேட்டு தொடர்ந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் தேவையான ஆவணங்கள் சமர்பிக்கப்படாத காரணத்தால் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக கூறியுள்ளது. இதனால், வராஹ ரூபம் பாடல் மீண்டும் படத்தில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் பழைய வராஹ ரூபம் பாடலில் இருந்த பின்னணி இசை இதில் இல்லை. மாறாக வேறொரு இசை சேர்க்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget