மேலும் அறிய

விஜயும் - உதயநிதியும் அரசியலில் எதிரி... ஆனால், என்னுடைய ஆதரவு... - வனிதா விஜயகுமார் பரபரப்பு பேட்டி

இயக்குனர் என்ற பரிமாணத்திற்கு முன்பாக பெரிய கோயிலுக்கு வந்தது எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக, என் முன்னோர்கள் எனக்கு கொடுத்த ஆசிர்வாதமாக நினைக்கிறேன். 

தஞ்சாவூர்: அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலிலும் விஜய் பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.

பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வனிதா

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா பெரிய கோயில் வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் இன்று தொடங்கியது. இந்த விழா நாளையும் நடக்கிறது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு இன்று நடிகை வனிதா விஜயகுமார் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் அப்பாவுக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை கிராமம்தான். அப்பா பெரிய கோயில் பற்றியும் ராஜராஜ சோழன் பற்றியும் நிறைய கூறியிருக்கிறார். கதைகளிலும் படித்துள்ளேன். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக பெரிய கோயிலுக்கு வருகிறேன். இது எனக்கு கிடைத்த பெரிய ஆசிர்வாதமாக நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. 

விஜயும் - உதயநிதியும் அரசியலில் எதிரி... ஆனால், என்னுடைய ஆதரவு... - வனிதா விஜயகுமார் பரபரப்பு பேட்டி

இயக்குனர் பரிணாமத்திற்கு முன்பு கிடைத்த ஆசிர்வாதம்
 
தஞ்சாவூர் நகர்பகுதிக்கு முதல்முறையாக வருகிறேன். இன்று ராஜராஜ சோழன் சதயவிழா என்று தெரியாது. இன்றைய நாளில் கோயிலுக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜோவிகா தயாரிப்பில் நான் முதல்முறையாக இயக்கும் படம் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்". இந்த படத்தின் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இயக்குனர் என்ற பரிமாணத்திற்கு முன்பாக பெரிய கோயிலுக்கு வந்தது எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக, என் முன்னோர்கள் எனக்கு கொடுத்த ஆசிர்வாதமாக நினைக்கிறேன். 

விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற வேண்டும்

அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு நான் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலில் புதிய பரிமாணம் எடுத்துள்ளார். இதில் விஜய் பெரிய வெற்றி அடையனும். விஜயும் - உதயநிதியும் அரசியலில் எதிரி என்பது சரிதான். விஜய் - உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள். நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சந்திரலேகா படத்தில் அறிமுகமான வனிதா

வனிதா விஜயகுமார் கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அடுத்தது ஆனந்த் ஜெய் ராயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் 2012ம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். பின்னர் கடந்த 2020ம் ஆண்டு டெக்னீசியனான பீட்டர் பால் என்பவரை மணந்த வனிதா விஜயகுமார் அவரையும் பிரிந்து சென்றார்.

இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் பதிவேற்றினார்
 
கடந்த அக்டோபர் முதல்வாரத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வனிதா விஜயகுமார் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பதிவேற்றினார். அதில் அவரும் ராபர்ட் மாஸ்டரும் இருக்கும் புகைப்படத்தில் அக்டோபர் 5ம் தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தது. பலரும் இது திருமண அறிவிப்போ என சந்தேகித்தார்கள். ஆனால் அது "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" படத்தின் புரமோஷன் போஸ்டர் என்று பின்னர் தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை ஜோவிகா விஜயகுமார் தயாரிக்க வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget