Valimai Shooting Spot Pic | இந்த இடம் தான் பைக் பறக்கும் சீன்.. வைரலாகும் வலிமை பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!
பைக் ஸ்டண்டுகள் எடுக்கப்பட்ட போது க்ளிக்கிய புகைப்படங்களாக அது இருக்கின்றன.
தனது பி.எம்.டபிள்யூ பைக்கும், ட்ராவல் பேக்கும் சகிதமாக அகில இந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். பயணத்தின் இடையில் அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வபோது வெளியாகி, வைரலாகி வருகின்றன.
Thala #AjithKumar offroading!
— Ramesh Bala (@rameshlaus) October 27, 2021
He is prepping for a future World Bike Tour.. Currently touring states in Northern India..
Video Courtesy: @suprej #Valimai pic.twitter.com/TyzDwlEpAC
மேலும், நடிகர் அஜித் நடித்துள்ள `வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான செலிபிரிட்டிகளிடம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து `வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக் ஸ்டண்டுகள் எடுக்கப்பட்ட போது க்ளிக்கிய புகைப்படங்களாக அது இருக்கின்றன. அதில் அஜித் உட்பட படக்குழுவினர் பலர் உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் அஜித் நடித்த `வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது. இயக்குநர் விக்னேஷ் சிவனின் வரிகளில் `நாங்க வேற மாரி’ என்ற டைட்டிலோடு அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு `வலிமை’ படக் குழுவினர் glimpse என்ற பெயரில் டீசர் வடிவிலான காணொளி ஒன்றையும் வெளியிட்டது,. இவை இரண்டும் ரசிகர்களை மகிழ்வித்ததோடு, அவை வைரலாகவும் இணையத்தில் பகிரப்பட்டன.
முன்னதாக, `வலிமை’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், புதிதாக மற்றொரு அப்டேட் வெளிவந்திருக்கிறது. `வலிமை’ படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் சூழலில், படத்தில் அஜித்திற்கு எதிராக இரண்டுக்கும் மேற்பட்ட வில்லன்கள் இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், எந்த நடிகர்கள் வில்லனாக நடிக்கிறார்கள் என்ற தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
`நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பின், நடிகர் அஜித் - இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் இணையும் இரண்டாவது திரைப்படமாக இருக்கிறது `வலிமை’. இந்தப் படத்தில் ஹூமா குரேஷி, பேர்ல் மானே, யோகி பாபு, கார்த்திகேய கும்மகொண்டா முதலான நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணியைக் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.
#Valimai shooting spot pic 🤩💥#AjithKumar pic.twitter.com/NaPCxPsJD3
— Bharani_Yuvan😷🙏( Stay Safe) (@Thala_Bharani18) October 31, 2021