வலிமை அப்டேட் கொடுத்த ஆர்.கே.சுரேஷ்
தல அஜித்தின் வலிமை அப்டேட் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் பேசப்பட்ட ஒன்று . நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அனா ஆர்.கே.சுரேஷ் . படத்தை பற்றிய அப்டேட் கொடுத்துள்ளார் .
H. வினோத் இயக்கத்தில் தல அஜித் மற்றும் ஹ்யூமா குரேஷி நடிப்பில் உருவாகி வரும் படம்தான் வலிமை. பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றார். "சதுரங்க வேட்டை", "தீரன் அதிகாரம் ஒன்று" ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வினோத், பாலிவுட் உலகத்தை கலக்கிய பிங்க் திரைப்படத்தை அஜித்துடன் இணைந்து "நேர்கொண்ட பார்வை" என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்.
மீண்டும் வினோத் - அஜித் கூட்டணியில் அடுத்த படத்தை எடுக்கவிருப்பதாக அப்போதே போனி கபூர் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் "வலிமை" படத்திற்கான Pre Production பணிகள் தொடங்கின. ஏறத்தாழ 2 ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். வலிமை நடத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும், அதற்காக அந்நாட்டு அனுமதிக்கு படக்குழு விண்ணப்பித்துள்ளது என்று அப்டேட்கள் வந்த வண்ணம் இருந்தன .
இந்நிலையில் , மே 1 அஜித்தின் 50-வது பிறந்தநாள் எப்படியாவது வலிமை அப்டேட் வந்துவிடும் என்று ரசிகர் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் , தேசத்தில் அனைவரும் பொருளாதாரத்தை இழந்து, உறவினர்களை இழந்து நிற்கும் இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று ஒட்டுமொத்த படக்குழுவும் இணைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தள்ளிவைத்துவிட்டனர் . இது மொத்த படக்குழுவும் இணைந்து எடுத்த முடிவு என்று படத்தின் உரிமையாளர் போனி கபூர் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது நாம் அறிந்ததே . இந்த முடிவை பலரும் பாராட்டி வந்தாலும் ரசிகர்களிடம் சற்று வருத்தத்தையும் இந்த முடிவு அளித்துள்ளது .வலிமை அப்டேட்டுக்காக மீண்டும் காத்திருப்போம் என்று இருந்தனர் .
இந்நிலையில் அஜித் ரசிகரனான ஆர்.கே.சுரேஷ் வலிமை படத்தை பற்றிய அப்டேட் ஒன்றை ஒரு நிகழ்ச்சி பெட்டியில் கொடுத்துள்ளார். வலிமை படக்குழுவினரிடம் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில் தல இது போன்ற அதிரடி காட்சிகளை எந்த படத்திலும் செய்தது இல்லை. இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் கண்டிப்பாக பெரும் அளவில் பேசப்படும் என்று கூறியதாக அவர் கூறினார் .கண்டிப்பா இந்தப் படம் திரை அரங்குகளில் வெளியாகும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று குறிப்பிட்டு இருந்தார் .
அந்த ஃபர்ஸ்ட் லுக் எப்போ வெளியாகும் சொன்னீங்கன்னா !!!