Valentine's Day 2022: நட்பு டூ காதல்.. நடிப்பில் மயங்கிய பிரசன்னா.! இதுதான் சினேகா - பிரசன்னா லவ் ஸ்டோரி!
தெலுங்கு படம் ஒன்றில் சினேகா நடித்த சமயத்தில் அதில் அவருடைய நடிப்பை பார்த்து அசந்து போன பிரசன்னா
காதலில் எத்தனையோ வகை இருக்கிறது. பள்ளிக்காதல் முதல் பருவகாதல் வரை வெவ்வேறாக வகைப்படுத்தலாம். இது எல்லாவற்றிலும் பியூட்டி என்னவென்றால் நம்மை நன்கு புரிந்துக்கொண்ட நண்பர்களே வாழ்க்கை துணையாக வருவதுதான். அப்படி கோலிவுட்டில் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி இன்று கணவன் , மனைவியாக வாழ்ந்து வரும் ஜோடிதான் பிரசன்னா- சினேகா தம்பதி. 2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் மூலமாக இணைந்து நடித்தனர். அந்த படத்தில்தான் இருவருக்குமான நட்பு ஆழமாக மாறி தற்போது காதலாக உருவெடுத்திருக்கிறது.
View this post on Instagram
தற்போது சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.தெலுங்கு படம் ஒன்றில் சினேகா நடித்த சமயத்தில் அதில் அவருடைய நடிப்பை பார்த்து அசந்து போன பிரசன்னா அதுவும் தான் காதலில் விழுந்ததற்கான ஒரு காரணம் என மேடை ஒன்றில் பகிர்ந்துக்கொண்டார் அதே போல பிரசன்னா குறித்து பேசிய சினேகா , நான் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பிரசன்னாதான் என்னை எப்போதுமே மோட்டிவேட் செய்துக்கொண்டிருப்பார். நீ ஒரு சிறந்த நடிகை , நீ வீட்டில் இருப்பது எனக்கு கில்டியாக இருக்கிறது என பலமுறை கூறியிருக்கிறார். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்போம். எங்களிடம் ஈகோ கிடையாது என தங்கள் பந்தம் குறித்து பகிர்ந்திருக்கிறார். சினேகா - பிரசன்னா இருவரும் வீட்டில் ஒரு மினி ஜிம் ஒன்றை வைத்திருக்கின்றனர். கப்புளாக சேர்ந்து அவர்கள் செய்யும் கியூட் , கீயூட் பதிவுகளையும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்கள் மனதனை ஸ்கோர் செய்துவிட்டனர்
View this post on Instagram