மேலும் அறிய

"ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி" இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !

ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில்,  சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி"

 

விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில்,  இப்ப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

"ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி" இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !

இந்நிகழ்வினில் 

தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியதாவது.., 

இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு,  2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்டில் தண்டனை வழங்கப்பட்டது, உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர்  எல்லா பிஸினஸ்  போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வருகிறார்,  ஆனால் இடையில் உள்ளவர்கள் தான் சம்பாதிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு இறுதியில் தான் என்ன கிடைக்கிறது என்பதே தெரிய வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தந்து புதிய தயாரிப்பாளரை வாழ வையுங்கள். அனைவருக்கும்  நன்றி

கலை இயக்குநர்  பாலாஜி பேசியதாவது.., 
இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. இயக்குநர் முதல் படம் போல் இல்லாமல், மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி 

ஒளிப்பதிவாளர் வீரமணி பேசியதாவது.., 
இந்தப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். இப்படத்தை கொச்சின் சென்னையில் இரவு பகலாக ஷீட் பண்ணினோம். இரண்டு டோனில் இரண்டு கலர் பேட்டரினில் ஷீட் செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர் கௌதம் வின்செண்ட் பேசியதாவது.., 
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் ஊர் கேரளா ஆனால் நான் படித்தது, வேலை பார்ப்பது சென்னையில் தான், இந்தப்படத்தில் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் அருமையாக வந்துள்ளது. என் மனைவி தான் இரண்டு பாடல்களில் பெண் குரலுக்கு பாடியுள்ளார். நாங்கள் எல்லோரும் புதியவர்கள் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகர் சினான் பேசியதாவது.., 
இயக்குநர் சந்தோஷுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. எனக்கு இது பெரிய வாய்ப்பு,  எனக்கு கொடுத்த கேரக்டரை நன்றாக செய்துள்ளேன் என நம்புகிறேன்,  அனைவரும் படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
நடிகர் பிட்டு தாமஸ் பேசியதாவது.., 
நான் கேரளா தான் தமிழ் பேச கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பு எனது கனவு நனவானது போல இருக்கிறது. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாக்யராஜ் சார் இருக்கும் மேடையில் இருப்பது பெருமை. இது க்ரைம் திரில்லர் நல்ல படம், இது என் இரண்டாவது தமிழ்படம். நானே டப்பிங் செய்துள்ளேன் படம் பார்த்து ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகை ஆஷிகா அசோகன் பேசியதாவது.., 
கடவுளுக்கு நன்றி. பாக்யராஜ் சார் போன்ற ஆளுமையுடன் இந்த மேடையை பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி. இந்தப்படம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற, நடக்கிற ஒரு முக்கியமான விசயத்தை படத்தில் பேசியுள்ளார்கள். படம் முழுக்க என்னுடன் உழைத்த அனைவருக்கும் நன்றொ. படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகை ஐஸ்வர்யா பேசியதாவது.., 
இரண்டு வருடமாக இந்த மேடைக்காக  காத்துக்கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கு மிக அவசியமான விசயத்தை பேசியுள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


இயக்குநர் சந்தோஷ் ரயான் பேசியதாவது.., 
இந்த படத்தை தயாரித்த சையத் தமீன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த லால் தேவ் சகாயம் சாருக்கு நன்றி. சரவணன் மசூத் இருவருக்கும் நன்றி. ஆஷிகா அசோகன் மிக முக்கியமான பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயின் ஐஸ்வர்யா எப்போது சார் படம் வரும் எனக்கேட்டுக் கொண்டே இருந்தார். சூப்பராக நடித்துள்ளார். வில்லன்  நடிகர் சினான் மிக நன்றாக நடித்துள்ளார். கௌதம் எனக்காக பல கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு அருமையான இசையைத் தந்துள்ளார். சந்தீப் மிக நன்றாக எடிட் செய்துள்ளார். ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி, இது நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது நம் தனிமனித ஒழுக்கத்தால் தான் மாறும், அதை இந்தப்படம் அழுத்தமாக பேசும். பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம். எங்களைப் போன்ற புதியவர்களின் முயற்சிக்கு ஆதரவு தந்து தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி. 

தயாரிப்பாளர், நடிகர்  JSK சதீஷ் பேசியதாவது.., 
இந்த விழா மிக சரியாக நடக்கிறது. படக்குழு மிகத் தெளிவாக எல்லாவற்றையும் செய்கிறார்கள்.  இப்படத்தை தயாரித்த சையத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிஸினஸ் பற்றி தெரிந்து, துணிந்து நல்ல படத்தை எடுத்துள்ளார். படம் நான் பார்த்து விட்டேன், இயக்குநர்  சந்தோஷ் முதல் படம் போல் இல்லாமல் அருமையாக எடுத்துள்ளார். மியூசிக் எடிட்டிங் எல்லாம் நன்றாக உள்ளது. நடித்த அனைவருமே மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். இது போன்ற புதிய படத்தின் விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தரும் பாக்யராஜ் சாருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 


இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது.., 
தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்திக்கு ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள்.  அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷ் என்னை அழைக்கும் போது, படத்தின் அவுட்லைன் சொன்னார், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத்  தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது. இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது. க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் அதிகம் கரைம் ஆக்சன் படங்கள் தான் பார்ப்பேன். முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார். இந்தப்படம் யார் நடித்திருக்கிறார் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நானும் இப்படம் பார்க்க  ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் ஆடியன்ஸ் ரிவ்யூ வந்த பிறகு நன்றாக இருந்தால், படத்திற்கு போகலாம் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே பத்திரிக்கையாளர்கள் இம்மாதிரி சின்ன படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் தந்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


ஒரு மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில்,  அவளது கொலைக்கான காரணத்தைத் தேடி அலைகிறாள்  அவளது தோழி.  கொலையின் பின்னணியையும், அந்த கொலைக்கான நியாயத்தை கண்டுபிடித்தாளா? கொலையை செய்தது யார்? அதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?, என்பது தான் இப்படத்தின் மையம். 

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து,   இன்வஸ்டிகேசன் திரில்லர்  மற்றும் கோர்ட் டிராமாவாக  இப்படம்  உருவாகியுள்ளது. வித்தியாசமான களத்தில், அனைவரையும் கவரும் கமர்ஷியல் அம்சங்களுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான். 

இப்படத்தில் ஆஷிகா அசோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் சாண்ட்ரா அனில்  நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பேராடி, நிழல்கள் ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், சென்னை, மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

தொழில்நுட்ப குழு 

இயக்கம் - சந்தோஷ் ரயான் 
தயாரிப்பு - சையத் தமீன்
ஒளிப்பதிவு - வீரமணி 
எடிட்டிங் - சந்தீப் நந்தகுமார்
இசை - கௌதம் வின்செண்ட் 
கலை இயக்கம்- பாலாஜி
உடை வடிவமைப்பு - ஆன்சி ஹெர்மன்
மேக்கப் - சுதீஷ் வன்னப்புரம்
மக்கள் தொடர்பு - A ராஜா

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
Embed widget