மேலும் அறிய

Andreanne Nouyrigat: நம்ம 'ரஜினிமுருகன்' ஆண்ட்ரியாவா இது? குக் வித் கோமாளி பிரென்ச் லேடி பற்றி அறியாத அரிய தகவல்கள்..!

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான Andreanne Nouyrigat பற்றி பலரும் அறியாத சில தகவல்கள் இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான குக்கிங் கம் காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. கடந்த மூன்று சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற ஒரு நிகழ்ச்சி இதுவாகும். தற்போது நான்காவது சீசன் மிகவும் குதூகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விரைவில் உலகளவில் பிரபலமாகி விடுவார்கள் என்பது கடந்த மூன்று சீசன்களை வைத்தே சொல்லிவிடலாம். அப்படி இந்த சீசன் போட்டியாளர் பற்றி தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம். 

Andreanne Nouyrigat: நம்ம 'ரஜினிமுருகன்' ஆண்ட்ரியாவா இது? குக் வித் கோமாளி பிரென்ச் லேடி பற்றி அறியாத அரிய தகவல்கள்..!

பிரெஞ்சு மாடல்:

Andreanne Nouyrigat தான் அந்த குக் வித் கோமாளி போட்டியாளர். இவர் ஒரு பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஒரு மாடல் மற்றும் நடிகையாவார். இவங்க யாருனு பல பேருக்கும் பல சந்தேகங்கள் இருக்கலாம். இவங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனா எங்கன்னு தான் தெரியல அப்படினு யோசித்து கொண்டு இருபவர்களுக்காக தான் இந்த பதிவு. இவர் ஒரு மாடல் என்றாலும் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார் என்றாலும் அவர் அனைவருக்கும் மிகவும் பிரபலமான முகமாக அறியப்பட்டது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ரஜினி முருகன்' படத்தில் நடிகர் சூரியின் ஜோடியாக நடித்தான் மூலம் தான்.   

இத்தனை தமிழ் படங்களா?

சிவாஜி, எனக்குள் ஒருவன், ஜீரோ, கண்டேன் காதல் கொண்டேன், வீர சிவாஜி, சாலையோரம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி 'மேல்நாட்டு மருமகன்' திரைப்படத்தில் லீட் ரோலிலும் நடித்துள்ளார் Andreanne Nouyrigat. இத்தனை படங்களில் நாம் இவரை பார்த்து இருந்தாலும் நல்ல பிரபலத்தை கொடுத்த படம் ரஜினி முருகன் தான். அப்படத்தில் ஆண்ட்ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Andreanne Nouyrigat: நம்ம 'ரஜினிமுருகன்' ஆண்ட்ரியாவா இது? குக் வித் கோமாளி பிரென்ச் லேடி பற்றி அறியாத அரிய தகவல்கள்..!

தமிழில் பட்டையை கிளப்பும் நடிகை:

பிரென்ச் நாட்டை சேர்ந்த சேர்ந்த Andreanne Nouyrigat தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். அது மட்டுமின்றி  அவர் இதுவரையில் நடித்த அனைத்து படங்களுக்கும் அவரே டப்பிங் பேசியுள்ளார். தமிழில் சரளமாக பேசமட்டுமல்ல எழுத படிக்கவும் தெரியும் என்பது ஆச்சரியமாக உள்ளது. பல காலமாக இவர் தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் தான் வாழ்ந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி பல மாடலிங் சார்ந்த போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். 

இப்படி பிஸியாக இருக்கும் சமயத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் Andreanne Nouyrigat. இதன் மூலம் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் குவியும் சான்ஸ் உள்ளது. அடுத்து வரவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக Andreanne Nouyrigat என்ட்ரி கொடுக்கும் சான்ஸ்களும் உள்ளது. விஜய் டிவியில் நுழைந்து விட்டார் அல்லவா இனிமேல் Andreanne Nouyrigat லெவலே வேற தான். 

Andreanne Nouyrigat குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பாக சமைத்து கலக்கி செய்து வருகிறார். அவரின் தமிழும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. டைட்டில் ஜெயிக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget