சீனிவாசா கோவிந்தா பாடலை பயன்படுத்தினால் இதான் தண்டனை...திருப்பதி தேவஸ்தானம் அதிரடி
சீனிவாசா கோவிந்தா பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்

டிடி நெக்ஸ் லெவல் சர்ச்சை
சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ் லெவல் திரைப்படம் கடந்த மே 16 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படத்தில் பக்திப் பாடலான சீனிவாசா கோவிந்தா பாடல் பயன்படுத்தப் பட்டிருந்தது. ஆன்மிக உணர்வுகளை புண்படுத்துவதாக இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின இப்படியான நிலையில் இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது
பாடலை பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு
சீனிவாசா கோவிந்தா பாடலுக்கான உரிமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ளது; அந்த பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இப்பாடலை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்; இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ தெரிவித்துள்ளார்





















