Kamal Birthday Special: "கடவுள் பாதி மிருகம் பாதி.." : உலகநாயகன் கமல்ஹாசன் தெறிக்கவிட்ட வசனங்கள் ஒரு பார்வை
“ மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல”, “கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்” - கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசனின் 68வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 5 வயதில் இருந்து திரையில் நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் இதுவரை தனது நடிப்பை நிறுத்தவில்லை. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல் என அனைத்திலும் ஸ்கோர் செய்து ரசிகர்களின் மனதில் ஆண்டவராக இடம்பெற்ற கமல்ஹாசன், படங்களில் பேசிய சில வசனங்கள் என்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருபவை. அந்த வரிசையில் சில படங்களின் வசனங்களை பார்க்கலாம்.
அன்பே சிவம் படத்தில் “முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக, கண்ணீர் விடற அந்த மனசு இருக்கே அதான் கடவுள்” என்ற வசனம் எப்பொழுதும் ரசிகர்கள் பேசுவது. தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற ”உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு” என்ற வசனமும், குருதிப்புனல் ”வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது” என்ற வசனமும், விருமாண்டி படத்தில் இடம்பெற்ற ”மன்னிக்க தெரிஞ்சவதான் மனுசன் ஆனா மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் வீரன்.. நான் வீரன், நீ மனுசனா?” என்ற வசனமும், மகாநதி படத்தில் உள்ள ”ஒரு நல்லவனுக்கு கெடைக்கற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கெடைச்சுருதே...அது எப்படி?” போன்ற வசனங்கள் ஹைலைட்டானவை.
இவை மட்டுமில்லாமல், பம்மல் கே. சம்பந்தம் படத்தில் இடம்பெற்றிருந்த, “பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது”, நாயகன் படத்தில் வரும் “அவன நிறுத்த சொல் நான் நிறுத்துறேன்….” என்ற டையலாகும், தசாவதாரம் படத்தில் வரும் ”மறதி ஒரு தேசிய வியாதி… மற்றும் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா நல்ல இருக்கும்”னு சொல்றேன் போன்ற வசனங்கள், இந்தியன் படத்தில் ”லஞ்சம் வாங்குறதும் தப்பு லஞ்சம் கொடுக்குறதும் தப்பு” போன்ற வசனங்கள் எவர்கிரீன் ஹிட் அடித்தவை.
இப்படி அரசியல், காதல், நாகரீகம், பொதுவுடைமை, சமத்துவம், வன்முறை என கமல் பேசிய ஒவ்வொரு வசனமும் ரசிகர்களால் அப்லாஸ் கொடுத்து கொண்டாடப்பட்டது.