மேலும் அறிய

Udhayanidhi Stalin: எனக்கு அப்போ புரியல... ஆனா சூர்யாவுக்கு புரிஞ்சுது.. 11 ஆண்டுகளுக்கு முன் நடந்த மறக்கமுடியாத சம்பவம்..!

நடிகர் சூர்யாவுக்கு இருந்த அரசியல் புரிதலால்தான் மிகப்பெரிய சம்பவத்தில் இருந்து தப்பித்த சம்பவம் ஒன்றை நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யாவுக்கு இருந்த அரசியல் புரிதலால் தான் தப்பித்த சம்பவம் ஒன்றை நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘ஏழாம் அறிவு’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் ஸ்ருதிஹாசன், அபிநயா என பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற ‘போதி தர்மர்’ தொடர்பான காட்சிகள் இன்றைக்கும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது. 

இப்படியான நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியின் தீவிரம் புரியாமல் தான் இருந்ததாக நேர்காணல் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், ’தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த படங்கள் பேச வேண்டிய கருத்தை சரியாக சொல்கிறார்களா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, ’இப்போது உங்களுக்கு இருக்க அரசியல் விழிப்புணர்வு ஒரு 7,8 ஆண்டுகள் கழித்து மாறலாம். ஒரு காலக்கட்டத்தில் அப்படியான அரசியல் விழிப்புணர்வு எனக்கே இல்லாமல் இருந்துள்ளது. 

2011 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்த ஏழாம் அறிவு படம் வெளியானது. நான் தான் ரெட் ஜெயன்ட் சார்பில் தயாரித்தேன் . அதில் சமூக நீதியை விமர்சித்து ஸ்ருதிஹாசன் பேசும் வசனம் இருந்தது. அப்போ எனக்கு அரசியல் புரிதல் கிடையாது. இதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அவரோட அரசியல் புரிதலில் அந்த வசனத்தை வைத்திருந்தார்.

படம் ரெடியானதும் நான் பார்க்கிறேன். குறிப்பிட்ட அந்த காட்சியில் சூர்யாவும் கிடையாது. அவர் படம் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணினார். ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்து  பற்றி சீன் வருது. அது வேணாம் தூக்கிடுங்க என சூர்யா சொன்னார். நான் ஒரு சின்ன வசனம்தானே.. விட்டுடுங்க என சொல்லிட்டேன். அப்போ என்னோட அரசியல் புரிதல் என்னவாக இருந்துள்ளது?. ஒன்றும் தெரியாமல் தான் இருந்துச்சு. அதுக்குப்பிறகு காலம் செல்ல செல்ல திமுக இயக்கம் பற்றி, சமூக நீதி பற்றி அரசியலுக்கு வர வர நான் தெரிஞ்சிகிட்டேன். 

முருகதாஸ் அதன்பிறகு அவரது படங்களில் அரசியல் பேசியிருந்தாலும், என்னோட தயாரிப்புல வந்த அந்த படத்தின் காட்சியை இப்போது பார்க்கும்போது தப்பா தான் தெரியுது. நான் அதை பண்ணியிருக்கக்கூடாது. அந்த நேரத்துல சூர்யாவுக்கு அரசியல் புரிதல் இருந்ததால், அவர் சொல்லித்தான் எனக்கு தெரியும்” என அவர் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget