Viduthalai: விடுதலை படத்தில் இணைந்தார் உதயநிதி... வழக்கம் போல வெளியிடும் ரெட் ஜெயண்ட்!
தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
![Viduthalai: விடுதலை படத்தில் இணைந்தார் உதயநிதி... வழக்கம் போல வெளியிடும் ரெட் ஜெயண்ட்! udhayanidhi stalin red giant movies association with Director Vetrimaaran viduthalai movie Viduthalai: விடுதலை படத்தில் இணைந்தார் உதயநிதி... வழக்கம் போல வெளியிடும் ரெட் ஜெயண்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/01/3e171d83a2a51191944fce484497c0831662012322014224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தை வெளியிட உள்ளதாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
View this post on Instagram
சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் 4வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள சிறுமலையில் நடைபெற்றது. படத்திற்காக சூரி செய்யும் கடுமையான வொர்க் அவுட் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னதாக விஜய் சேதுபதியும், சூரியும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதனிடையே நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் நேற்றைய தினம் நாளை(இன்று) காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியானது. இது விடுதலை படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே விடுதலை படத்தின் தயாரிப்பில் ஆர்.எஸ்.என்ஃபோடைன்மெண்ட், கிராஸ்ரூட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இதனுடன் சூரி,விஜய் சேதுபதி தனித்தனியாக இருக்கும் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அதில் உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் என்ற குறள் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் பகைவரின் அகங்காரத்தை ஒருவர் ஒரு பொருட்டாக கருதி அதனை அழிக்கவில்லையென்றால் அந்த ஏளனத்திற்கு பரிசாக நமது அழிவே அமையும் என்பதாகும். மேலும் இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)