TV Serial Update : ஒரே அழுத்து...மாறிடுச்சு கழுத்து.. என்னடா இது! எவ்வளவு பெரிய போங்கு.. ரோஜா சீரியலை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
டிஆர்பில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ரோஜா சீரியலை நெட்டிசன்கள் பங்கமாக வச்சு செய்து வருகின்றனர்.
தமிழ் சூழலில் சீரியல்களின் பங்கு முக்கியமானது. தற்போது இருக்கும் பெரும்பாலான சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இந்த சீரியல் கலாசாரத்தை தொடங்கிவைத்தது சன் டிவி என சொல்லலாம்.
குறிப்பாக ஒரு சேனலை டிஆர்பியில் உச்சம் கொண்டு செல்வதிலும் சீரியல்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அந்தவகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போதைய நிலவரப்படி டாப்பில் இருப்பது ரோஜா சீரியல்.
இரவு 9 மணியிலிருந்து 9.30 மணிவரை ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிபு சூர்யன் கதாநாயகனாகவும், ரோஜா கதாபாத்திரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா நல்காரும் நடிக்கின்றனர். இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.
SunTV TRP Rating U+R (Urban+Rural)#SunTV #Roja #Rojaserial #Rojaonsuntv #Sibbusuryan #Priyankanalkar pic.twitter.com/5j8woU8nWC
— Roja Serial (@roja_serial) June 3, 2021
இப்படிப்பட்ட சூழலில் டிஆர்பில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ரோஜா சீரியலை நெட்டிசன்கள் பங்கமாக வச்சு செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஒளிபரப்பான அந்த எபிசோட்டில், ரோஜா இறந்துவிட்டதாக அனுவையும், சாக்ஷியையும் நம்ப வைக்க அர்ஜுன் சார், செண்பகம், அஷ்வின், பூஜா, போலீஸ் அதிகாரி சந்திரகாந்தா போன்ற கதாபத்திரங்கள் ஒரு திட்டம்தீட்டுகின்றனர்.
Humans ஆடா நீங்க😂😂😂😂 @DrSharmila15 மேடம் 😂😂😂 pic.twitter.com/dYED0iWLcV
— விஜய் (@adi10vj) January 7, 2022
அதில், ஏற்கனவே இறந்துபோன பெண்ணின் முகத்தில் கர்ணன் படத்தில் அடிக்கடிவந்துசெல்லுமே அது போன்ற ஒரு பொம்மையை வைக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த முகம் ரோஜா முகமாகவே மாறி விடுகிறது. அட கொக்கமக்கா இது என்ன புது கதையா இருக்கு. அவன் அவன் பல கோடி செலவுபண்ணி என்ன என்னமோ பண்றான்... ஒத்த பத்து ரூபாய் முகமூடில முகத்தையே மாத்திடாங்களே என்று கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். அதேபோல், நாடகமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கேள்வியும் எழுப்பியும் வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்