மேலும் அறிய

Leo Trisha: ’லியோ’ விஜய்யின் ஜோடி நான்தான்.. வீடியோ, ஃபோட்டோஸ் பகிர்ந்து உறுதி செய்த த்ரிஷா!

லியோ படப்பிடிப்பிலிருந்து விலகி விட்டார், மீண்டும் சென்னை திரும்பினார் எனும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடிகை த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ பகிர்ந்துள்ளார்.

2021ஆம் ஆண்டு வெளியான 'மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் படம் ’லியோ’.

விஜய் - த்ரிஷா ஜோடி

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் 67ஆவது படமான இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் எனத் தெரியவந்தது முதலேயே ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியது.

மேலும் கோலிவுட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் விஜய்யின் சிறந்த  ஆன்ஸ்க்ரீன் ஜோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்படும் நடிகை த்ரிஷா இப்படத்தில் இணைந்ததை அடுத்து ரசிகர்கள் கொண்டாட்ட மன நிலையில் ஆழ்ந்தனர். த்ரிஷாவுக்கும் இந்தப் படம் 67ஆவது படமாக அமைந்துள்ளது ரசிகர்களை மேலும் ஆர்வத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி படம் குறித்த அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, பூஜை வீடியோக்கள் , ஃபோட்டோக்கள் பகிரப்பட்டன. தொடர்ந்து ’லியோ’ எனும் படத்தலைப்பும் பிப்.03ஆம் தேதி டைட்டில் டீசர்  உடன் அறிவிக்கப்பட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா

இந்நிலையில், சென்ற மாதம் மத்தியிலேயே நடிகை த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் தகவல் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

ஆனால், லியோ டைட்டில் டீசர் வெளியான பிறகு கடந்த சில நாள்களாக த்ரிஷா லியோ படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும், இதனால் மீண்டும் சென்னை திரும்பிவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

எனினும் மற்றொருபுறம் காஷ்மீர் குளிரைத் தாங்க முடியாமல் த்ரிஷா மீண்டும் சென்னை திரும்பினார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

காஷ்மீர் வீடியோ

இந்நிலையில், முன்னதாக விமான ஜன்னலோர இருக்கையில் இருந்து காஷ்மீரின் அழகைப் படம்பிடித்து த்ரிஷா தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 

Leo Trisha: ’லியோ’ விஜய்யின் ஜோடி நான்தான்.. வீடியோ, ஃபோட்டோஸ் பகிர்ந்து உறுதி செய்த த்ரிஷா!

மேலும் தான் தங்கி இருந்த அறை வழியாகக் கொட்டும் உறைபனி, குளிரில் நடுங்கியபடி தான் சாப்பிட்ட மேகி ப்ளேட் என வரிசையாக ஃபோட்டோக்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து தான் படத்தில் நடித்து வருவதை உறுதி செய்துள்ளார். எனினும் த்ரிஷா மீண்டும் லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீர் திரும்பினாரா என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தளபதி 67 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலிகான், இயக்குநர் கௌதம் மேனன், கொரியோகிராஃபர் சாண்டி மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளனர்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு டைட்டில் டீசரிலேயே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
Embed widget