மேலும் அறிய

Trisha : "வர்ஷம்" பாடலுக்கு ஆர்ப்பரித்த தியேட்டர்..! 18 ஆண்டுகள் கடந்தும் மாறாத அன்பு..! ரசிகர்கள் அன்பில் ஆடிப்போன த்ரிஷா

தமிழில் ஸ்ரேயா, ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தின் ஒரிஜினல் பதிப்பான வர்ஷம் படம், தெலுங்கில் மாஸ் காட்டி வசூல் வேட்டை நடத்தியது.

’வர்ஷம்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், தன் அறிமுகப்பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் காட்சியைப் பகிர்ந்து த்ரிஷா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

திரிஷா : 

கோலிவுட்டில் தொடங்கி டோலிவுட் பயணித்து தென்னிந்திய சினிமா முழுவதும் கடந்த 20 ஆண்டுகளாக க்யூட் குயினாக நடிகை த்ரிஷா கோலோச்சி வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த த்ரிஷா, 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றதுடன், மாடலிங் உலகில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து 2002ஆம் ஆண்டு ’மௌனம் பேசியதே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். 

தொடர்ந்து டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த த்ரிஷாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். 2004ஆம் ஆண்டு நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக நடித்த ‘வர்ஷம்’ படத்தில் த்ரிஷா அறிமுகமான நிலையில் அப்படம் அவரது கரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

வர்ஷம் படம் :

தமிழில் ஸ்ரேயா, ஜெயம் ரவி நடித்த ‘மழை’படத்தின் ஒரிஜினல் பதிப்பான வர்ஷம் படம், தெலுங்கில் மாஸ் காட்டி வசூல் வேட்டை நடத்தியது.

ஆக்‌ஷன் கலந்த காதல் கதையான இப்படத்தை சோபன் இயக்கி இருந்தார், தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் தெலுங்கில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

சில்வர் ஜூப்ளி படமாக திரையரங்குகளில் ஓடித்தீர்த்த இப்படம் முன்னதாக தெலங்கானாவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு :

நடிகர் பிரபாஸ் திரையுலகுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் விதமாக வர்ஷம் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இப்படத்தின் திரையரங்கக் காட்சிகள் முன்னதாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகின.

அதில் த்ரிஷாவின் அறிமுகப்பாடலான ‘நூ ஒஸ்தாவண்டே ....’ பாடலுக்கு ஒட்டுமொத்த திரையரங்கமும் எழுந்து நடனமாடி ஆர்ப்பரிக்கும் காட்சிகள் வெளியாகின.

இந்நிலையில், முன்னதாக இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து த்ரிஷா அகமகிழ்ந்து போயுள்ளார்.

"என் முதல் தெலுங்கு படம்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்தது போல் உணர்கிறேன். திரைப்படங்கள் என்றைக்குமானவை என்பதை நிரூபிக்கப் போகிறேன்.

உங்களால் தான் நான் நானாக இருக்கிறேன் என்று மீண்டும் சொல்கிறேன். என் இதயம் மழையால் நனைந்துள்ளது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Trish (@trishakrishnan)

த்ரிஷாவின் இந்தப் பதிவில் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget