ச்சீ ச்சீ ச்சீ-ய விடுங்க; த்ரிஷாவின் லடுக்கி லடுக்கி ட்ரெண்டிங் பாடல் பற்றி தெரியுமா?
சோஷியல் மீடியாவில் இப்போது டிரெண்டாகி வரும் பாடல் தான் ச்சீ ச்சீ ச்சீ. இசை ஆல்பத்திற்காக உருவான இந்த பாடல் தான் கடந்த ஒரு மாதமாகவே சோசியல் மீடியாவை ஆக்கிரமித்தது.

இந்தப் பாடலை எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார் சத்யா அதிகாரி. இது ஒடியா மொழியில் உருவான பாடல் என்றாலும்... இந்த பாடலின் அர்த்தம் தெரியாமலேயே பலர் ரசிக்க துவங்கி விட்டனர்.
பின்னர் இந்த பாடலின் தமிழ் அர்த்தம் வெளியானது. அதாவது காதலின் வலியை உணர்த்தும் வகையில் தான் இந்த பாடல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த பாடலி உண்மையான அர்த்தம் என்னவென்றால், "ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன சந்தோஷங்களை நான் உனக்கு கொடுக்க முயற்சித்தேன். நீயும் நானும் ஒவ்வொரு நானும் மகிழ்ச்சியாக இருப்போம் என உங்க அம்மாவிடம் சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கூட நான் வாக்குக் கொடுத்தேன். எனக்கு நீ எப்படி என்று நான பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்.
ஆனால் நான் ஊரிலிருந்து வந்ததும் நீ எப்படி என்னை ஏமாற்றிவிட்டாய்? இது வெட்கப்படக் கூடிய ஒன்று . நீ சொத்து தான் முக்கியம் என்று போய் விட்டாய், நீ உண்மையான என்னுடைய அன்பை புரிந்து கொள்ளவில்லை ச்சீ ச்சீ ச்சீ என படி இருப்பார்.
இந்த பாடலை போல் தற்போது ‘லடுகி லடுகி என்ன லடுகி என்ற பாடல் ஏற்கனவே ட்ரெண்ட் ஆனது. கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தெலுங்கு படமான அல்லாரி பல்லோடு என்ற படத்தில் பெற்ற பாடல் தான் நோப்பி நோப்பி எமி நோப்பி. இந்த படத்தில் நிதின் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் தான் தமிழில் 'போக்கிரி தம்பி' என்ற டைட்டிலில் வெளியானது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் தமிழ் டப்பிங் பாடல் தான் லடுக்கி லடுக்கி. இந்த பாடலும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வந்ததது குறிபிடித்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

