மேலும் அறிய

ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்

நட்சத்திர உடற்பயிற்சியாளர் சிவகுமார் நடிகர் அருண் விஜய் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் அருண் விஜய் குறித்து நட்சத்திர பயிற்சியாளர் சிவகுமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அருண் விஜய்யை ‘என்னை அறிந்தால்’ படத்திற்காகத் தயார் செய்தது குறித்துப் பேசிய சிவகுமார், தனது பெயரை அருண் விஜய் ஒருமுறைகூட குறிப்பிடவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்படங்களில் நடிகர்கள் ஒவ்வொரு படத்திற்கு தங்களது உடல் ரீதியான தோற்றத்தில் மாற்றங்களை கொண்டு வருகிறார்கள். கதைக்கு ஏற்றபடி உடல் எடையை குறைத்தும் , ஃபிட்டாகவும் வடிவமைக்கிறார்கள். இந்த நட்சத்திரங்களின் பயிற்சியாளர்களுக்கு இதில் பெரிய பங்கு இருக்கிறது. அந்த வகையில்  தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களின் பயிற்சியாளராக இருந்து வருகிறார் சிவகுமார். அஜித் , பரத் , ராகவா லாரன்ஸ், அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அருண் விஜய் குறித்து சிவகுமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

செலிபிரிட்டி டிரெய்னர் சிவகுமார் ஆதங்கம் 

"இதை சொல்வதற்காக அருண் விஜய் என்னை தவறாக நினைத்துக்கொள்ளக் கூடாது. நான் அருண் விஜய்யை ‘என்னை அறிந்தால்’ படத்திற்காகத் தயார் செய்தேன். ஆனால், அருண் ஒரு இடத்தில்கூட என்னுடைய பெயரைச் சொல்லவில்லை.

‘என்னை அறிந்தால்’ படத்தில் சிவாதான் செய்தார், ‘குற்றம் 23’ படத்தைச் செய்தார், ‘புரூஸ் லீ’ செய்தார், ‘தடம்’ செய்தார், ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திலும் செய்தார் என்று அருண் ஒரு இடத்தில் சொல்லியிருக்கலாம். ஆனால், என்னுடைய பெயரைச் சொல்லவில்லை. அஜித் சார் என்னை பாராட்டியிருக்கிறார். என் நண்பர் பரத் என்னை பாராட்டியிருக்கிறார். ராகவா லாரன்ஸ் பாராட்டியிருக்கிறார். ஆனால் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜயின் தோற்றம் தானே பெரியளவில் பேசப்பட்டது. ஆனால் என்னைப் பற்றி அருண் விஜய் ஒரு இடத்தில் கூட சொன்னதில்லை. 

அருண் விஜய் நல்ல நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு படத்துக்கும் அவருடைய தோற்றத்தை மாற்றியிருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்தில் இருந்த அருண் விஜய்யை, அதற்குப் பிறகு வந்த படங்களில் பார்த்தால் வித்தியாசமாக இருக்கும். ஒரு படத்துக்கு ஒரு மாதிரி, அடுத்த படத்துக்கு இன்னொரு மாதிரி அவரை மாற்றிக் காட்டியிருக்கிறார்கள்.

நீங்கள் கேட்டதால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது. இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுக்கான மார்க்கெட்டிங்கை அவர்களே சரியாகச் செய்துகொள்கிறார்கள். மீடியாவில் நீங்கள் இதைப் பிரசுரம் செய்கிறீர்கள். அதுவே போதும்” என்று பேசியுள்ளார். அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் தனது பங்களிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்ற சிவகுமாரின் இந்தப் பேச்சு தற்போது கவனம் பெற்று வருகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Seyon : சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
Seyon : சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Embed widget