மேலும் அறிய

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!

‘சேயோன்’ படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காட்சிகளைப் படமாக்கும் விதம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தொடர்பான இந்தப் பிரச்சினையில் ராஜ்கமல் நிறுவனம் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘அமரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மீண்டும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்கும் படம் ‘சேயோன்’. டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து கமல்ஹாசன், ஆர். மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் ராஜ் பி ஷெட்டி, சீமான், பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இயக்குநருடன் கருத்து வேறுபாடா?

சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக வலைப்பேச்சு சேனல் தகவல் தெரிவித்துள்ளது.

வலைப்பேச்சு பிஸ்மி கூறியதாவது “சிவகுமார் முருகேசன், சிவகார்த்திகேயனிடம் இப்படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போனதால், ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம் உள்ளிட்ட சில படங்களைத் தள்ளிவைத்துவிட்டு ‘சேயோன்’ படத்தில் நடிக்க அவர் சம்மதித்ததார்.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கியபோது, இயக்குநர் காட்சிகளைப் படமாக்கும் விதம் சிவகார்த்திகேயனுக்கு திருப்தியளிக்கவில்லை எனத் தெரிகிறது. கதையில் குறை இல்லை என்றாலும், காட்சிகள் சீரியல் போல இருப்பதாகவும், ஒரு முன்னணி கதாநாயகனுக்கான உயர்வும் பிரம்மாண்டமும் திரையில் வெளிப்படவில்லை என்றும் சிவகார்த்திகேயன் நினைத்திருக்கிறார்.

மேலும், இயக்குநர் தனது ஆரம்பகாலப் பயணத்தில் தன்னுடன் பணியாற்றிய கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடன இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு இப்படத்தில் வாய்ப்பளிக்க விரும்பியிருக்கிறார். ஆனால், சிவகார்த்திகேயன் தனக்குப் பழக்கமான அனுபவம் வாய்ந்த கலைஞர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக நடனக் காட்சிகளில் அதிக நடனக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகப் படமாக்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் விருப்பமாக இருந்துள்ளது. இயக்குநர் தனது நண்பரான நடன இயக்குநருடன் காட்சிகளைப் படமாக்கியதால் அதிருப்தி அதிகரித்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து ராஜ்கமல் நிறுவனம் தலையிட்டு சில மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதன் பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்
Seyon : சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
Seyon : சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Embed widget