மேலும் அறிய

தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!

Thirupparankundram: திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய 'தீபத்தூண்' தீபம் ஏற்றப்படாமல் இருந்ததற்கான காரணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப வழக்கை கடந்த நவம்பர் 20-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தி நவம்பர் 24-ம் தேதி மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் ஆட்சியர் விளக்கம்

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை செயல்படுத்தாததற்காக மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கூறியதோடு நீதிமன்றத்தின் உத்தரவை ஏன் செயல்படுத்த முடியவில்லை என்பதற்கான விளக்கத்தையும் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அதில் திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய 'தீபத்தூண்' பகுதியில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. ஆனால், இந்த சடங்கை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருக்குக் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நல்லெண்ணத்துடன் நிறைவேற்ற நான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்.

இதையும் படிங்க: Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

இதில் வேண்டுமென்றே உத்தரவை மீறிய செயல் எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நான் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறேன். தீபத்தூணில் விளக்கு ஏற்றப்படாததற்காக நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நவம்பர் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு 'தீபத்தூண்' பகுதிக்கு 27 பேர் கொண்ட ஆயத்தக் குழுவினர் சென்றடையத் திட்டமிடப்பட்டிருந்தோம். இந்தக் குழுவில் திருவண்ணாமலையிலிருந்து வந்த 'தீபம்' தொடர்பான தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவர், மின்சாரப் பணியாளர்கள் 10 பேர் மற்றும் சாரக்கட்டு அமைக்கும் பணியாளர்கள் 15 பேர் இடம்பெற்றிருந்தனர்.

மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை

இவர்களுடன் தேவையான உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகத்தின் முடிவால், மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. ஏனெனில், தீபத்தூண் விளக்கை ஏற்றுவதற்கு தகுதியான குழுவை தேவஸ்தானமே அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த குழுவிற்குப் பதிலாக வேறொரு குழுவை நியமிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. 

கோயில் நிர்வாகம் 

இந்த விவகாரம் குறித்து பின்னர் இரவு 8.21 மணிக்கு ஒருங்கிணைப்பு வழக்கறிஞரிடம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப்பட்டிருந்தன. எழும் எந்தவொரு சிக்கலுக்கும் உடனடித் தீர்வு காணப்பட்டது. தேவஸ்தான நிர்வாகம் குழுவிற்கு அனுமதி வழங்குவது மட்டுமே எஞ்சியிருந்த ஒரே நடவடிக்கையாக இருந்தது. மேலும், தீபத்தூணில் விளக்கேற்றுவதற்கு நபர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்த விவரங்களை, கோயில் நிர்வாகத்தினர் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஆதார ஆவணங்களுடன் கூடுதல் நிலவர அறிக்கையை தாக்கல் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முதற்கட்ட அறிக்கையை நீதிமன்ற பதிவில் எடுத்துக்கொள்ளுமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா: லட்சதீப ஒளியில் ஜொலித்த கோயில்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா: லட்சதீப ஒளியில் ஜொலித்த கோயில்!
மதுரை ஆட்சியருக்கு சமூக வலைதள மிரட்டல்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் பாதுகாப்பு தீவிரம்!
மதுரை ஆட்சியருக்கு சமூக வலைதள மிரட்டல்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் பாதுகாப்பு தீவிரம்!
திருப்பரங்குன்றம் தூண் தீபம்: போராடிய 300 பேர் மீது வழக்குப் பதிவு!
திருப்பரங்குன்றம் தூண் தீபம்: போராடிய 300 பேர் மீது வழக்குப் பதிவு!
திருப்பரங்குன்றம் மலைக்கு 2வது நாளாக தடை: பக்தர்கள் ஏமாற்றம், போலீஸ் குவிப்பு!
திருப்பரங்குன்றம் மலைக்கு 2வது நாளாக தடை: பக்தர்கள் ஏமாற்றம், போலீஸ் குவிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Embed widget