Kannadasan - M.S.V combo: எம்.எஸ்.வி - கண்ணதாசன் காம்போவில் வெளியான மிகச் சிறந்த 10 பாடல்கள்... இதோ லிஸ்ட்..!
தமிழ் சினிமாவில் இரு முத்துக்காளான கவிப்பேரரசு கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கூட்டணியில் வெளியான ஆகச்சிறந்த பத்து பாடல்கள்.
தமிழ் சினிமா கண்ட ஒரு மனிதருள் மாணிக்கம் கவியரசு கண்ணதாசன். அவரை மிஞ்ச இன்று வரை வேறு ஒரு கவிஞன் பிறக்கவில்லை. பாடலாசிரியர், கவிஞர் மட்டுமின்றி ஏராளமான ஆன்மீக சிந்தனைகள், கருத்துக்கள், போதனைகள், நூல்கள் என எண்ணற்ற கருத்துக்களை மக்களுக்கு நெற்றியில் அடித்தார் போல வடித்தவர் கவிஞர் கண்ணதாசன்.
அவரின் பாடல் வரிகளுக்கு இசை மூலம் கோர்வையாக்கி உயிர் கொடுத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். இந்த இரு மேதைகள் பிறந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என்ற பெருமையை கொஞ்சம் கர்வமாகவே சொல்லிக்கொள்ளலாம். கரைக்குடியிலும் பாலக்காட்டிலும் பிறந்தவர்களை சினிமா ஒன்றிணைத்து. இவ்விரு ஜாம்பவான்களும் ஜூன் 24ம் தேதியான இந்த நாளில் தான் மண்ணில் பிறந்தர்கள். இவர்களின் கூட்டணியில் ஆகச்சிறந்த 10 பாடல்களை பற்றி பார்க்கலாம்.
1 . கர்ணன் படத்தில் இடம்பெற்ற 'உள்ளத்தில் நல்ல உள்ளம்...' பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு இன்றும் அப்பாடல் உறங்காமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அனைவரின் உள்ளங்களிலும் மேலோங்கி இருக்கும் இந்த பாடல் ஆகச்சிறந்த பாடல்களில் ஒன்றாகும்.
2 . அண்ணன் - தங்கைகளின் பாசத்திற்கு இன்றும் இலக்கணமாக இருக்கும் 'பாசமலர்' படத்தில் இடம்பெற்ற 'மலர்ந்தும் மலராத' பாடல் காலங்களை கடந்து இன்றும் சகோதர சகோதரிகளின் ஃபேவரட் பாடல்.
3 . 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' - இப்பாடலை எம்.எஸ்.வி பாடாத மேடையே இல்லை. கண்ணனின் புகழை பாராட்டும் இந்த பாடல் இன்றும் பல கோயில்களில் ஒலிக்கின்றன.
4 . 'பார்த்த ஞாபகம் இல்லையோ' - புதிய பறவை படத்தில் இடம்பெற்ற இப்பாடல் கண்ணதாசன் அழகான வரிகளுக்கு மேலும் பரவசத்தை கொடுத்தது எம்.எஸ். விஸ்வநாதனின் இசை
5. 'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு' - ஆண்டவன் கட்டளை படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் வாழ்க்கையின் சாராம்சத்தை வெளிப்படுத்திய ஒரு பாடல்.
6 . சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... - புதிய பறவை படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் எந்த காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அது ஃபேவரட் பாடலாக நிச்சயம் இருக்கும். அது தான் அப்பாடலின் ஸ்பெஷாலிட்டி.
7 . அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்... - ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எப்போது கேட்டாலும் உற்சாகத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரு பாடல்.
8 . நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் - பாலும் பழமும் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் ஈருடல் ஓர் உயிர் பந்தத்தை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல். பாடல் வரிகளுக்கு மெட்டமைத்த எம்.எஸ்.வியின் ஹம்மிங் கூட இன்றும் பிரபலம்.
9 . அச்சம் என்பது மடமையடா... - மன்னாதி மன்னன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் திராவிடர்களின் துணிச்சலை வெளிப்படுத்திய ஊக்கமிகுந்த புத்துணர்ச்சியான பாடல்.
10 . ஆடவரெல்லாம் ஆட வரலாம் - கருப்பு பணம் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் அந்த காலகட்டத்தில் வந்த பெப்பியான பாடல்.