Mission Impossible Postponed: போராட்டத்தால் திணறும் ஹாலிவுட்... மிஷன் இம்பாசிபள் 2ஆம் பாகம் ரிலீஸ் ஒத்திவைப்பு!
ஹாலிவுட் திரைத்துறை நடிகர்களின் போராட்டத்தினால் டாம் குரூஸ் நடித்துள்ள ‘மிஷன் இம்பாசிபள்’ படத்தின் அடுத்த பாகத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம்
ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகர்களுக்கு ஊதிய உயர்வு, மேம்படுத்தப்பட்ட பணிச்சூழல் மற்றும் பென்ஷன் சேவைகள் குறித்து SAG – AFTRA என்று சொல்லப்படும் ஹாலிவுட் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர்கள் சார்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. ஏற்கனவே கொரோனாவால் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தக் கோரிக்கைகளை முழுவதுமாக ஏற்க மறுத்துவிட்டார்கள். இதன் காரணத்தினால் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பாக ஹாலிவுட் நடிகர்கள் அனைவரும் கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இவ்வளவு பெரிய போராட்டத்தை ஹாலிவுட் சினிமா சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
நிலுவையில் நிற்கும் படத் தயாரிப்பு வேலைகள்
ஏற்கெனவே ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நடிகர்கள் சங்கமும் போராட்டத்தில் இறங்கியது. ஹாலிவுட்டின் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பெருவாரியான படங்கள் இதனால் நிலுவை இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மேலும் தாங்கள் நடித்த படங்களை பிரச்சாரம் செய்ய நடிகர்கள் முன்வரமுடியாத சூழலில் பல படங்கள் ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. சமீபத்தில் எழுத்தாளர்கள் சங்கம் உடனான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கம் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் சங்கத்துடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருக்கிறது.
மிஷன் இம்பாசிபள்
இந்தப் போராட்டங்களால் நிலுவையில் இருக்கும் பல்வேறு படங்களில் ஒன்று டாம் க்ரூஸ் நடிப்பில் இந்த ஆண்டு முன்பு வெளியான மிஷன் இம்பாசிபள் டெட் ரெக்கனிங். கடந்த ஜூலை மாதம் வெளியான இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால் ஓப்பன்ஹெய்மர் மற்றும் பார்பீ ஆகிய படங்களின் வருகையால் இந்தப் படத்தின் வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. உலகளவில் மொத்தம் 517 மில்லிய டாலர்களை வசூல் செய்த இந்தப் படம், மிஷன் இம்பாசிபள் படத்தின் முந்தைய பாகத்தைவிட குறைவாகவே வசூல் செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் மேல் அனைத்து எதிர்பார்ப்புகளும் குவிந்தன.
ரிலீஸ் ஒத்திவைப்பு
Paramount Pictures has delayed “Mission: Impossible – Dead Reckoning Part Two” to its new spot on May 23, 2025.
— Variety (@Variety) October 23, 2023
“A Quiet Place: Day One,” previously scheduled for March 8, 2024, will open on June 28, 2024. https://t.co/KXdsjcQEkP pic.twitter.com/NXIBA9iEkh
ஆனால் எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் போராட்டத்தினால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமாக பாராமெளண்ட் பிக்ச்சர்ஸ் மிஷன் இம்பாசிபள் டெட் ரெக்கனிங் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 2025ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வெளியாகும் என தற்போது அறிவித்துள்ளது. இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. மிஷன் இம்பாசிபள் படத்தைத் தவிர்த்து ஸ்பைடர் மேன், வெனாம் உள்ளிட்ட பிரபல படங்களின் ரிலீஸ் தேதிகளும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.