மேலும் அறிய

Thankar Bachan: தமிழ்நாட்டில் மக்களாட்சி எப்போதும் மலராது.. தங்கர்பச்சன் ஆதங்கம்!

தங்கர் பச்சன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து பாமக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப் போவதில்லை என தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பற்றி இயக்குநரும், பாமக நிர்வாகியுமான தங்கர் பச்சன் காட்டமாக விமர்சித்துள்ளார். 

ஏப்ரல் 23ம் தேதியான நாளை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியானது நிலவுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை சார்ந்த பிரபலங்கள் பலரும் வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டனர். 

அந்த வகையில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட தங்கர் பச்சன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து பாமக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “நாற்பது கோடிகள் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் எனும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள்! செலவழித்தப் பணத்தை திருப்பி எடுக்கவும், மேலும் கொள்ளை அடித்து அடுத்த தேர்தலை சந்திக்கவும் மட்டுமே ஐந்தாண்டுகள் வேலை செய்வார்கள்! இதில் மக்களாட்சிக்கு இனி என்ன வேலை இருக்கப் போகின்றது?

இனிமேல் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியதுதான்.

அனைத்து திருட்டுத்தனங்களையும் செய்வதற்கு மக்கள் கேள்வி கேட்காதவாறு அவர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளும் சூழ்ச்சியை அறிமுகப்படுத்திய கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப் போவதில்லை!” என தெரிவித்துள்ளார். 

முன்னதாக மற்றொரு பதிவில், “நான் பரப்பரை செய்து வரும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய மனமாற்றத்தை மக்களிடம் காண்கிறேன். அதிகார பலம், பண பலம் இவற்றையெல்லாம் கடந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே தீரும் என்பதை கணிக்க முடிகிறது!” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget